எழில் இயக்கும் புதிய படத்தில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக்….!

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்குப் பிறகு இரண்டு படங்களை முடித்து விட்டார் இயக்குனர் எழில். எனினும் பைனான்ஸ் சிக்கல்களால் இந்தப் படங்கள் இன்னும்வெளிவரவில்லை.

இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் எழில் ஈடுபட்டு வந்தார். இந்தக் கதையில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

You may have missed