நாளை ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்த நாள் . அவர் ரசிகர்கள் இந்த மாத தொடக்கத்திலேயே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்துள்ளார்.

‘நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்-3 பரிசுகள் 1-chess King “இன்று அன்று என்றும் King”, 2-HP நிறைந்த குதிரை “ஓட்டம் தொடர…, 3-Painting of mrs mr Of V S “பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன்!’ என்று பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.