யக்குனர் பார்த்திபன், சீதா தம்பதியினரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு நடிகர் கமல் உள்பட  திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சீதா தம்பதியினர் மூத்த மகள் கீர்த்தனா. இவர் ஏற்கனவே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்துள்ளார். தற்போது உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவுக்கும், அக்சய் என்பவருக்கும்  திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள   லீலா பேலஸில் இன்று காலை கீர்த்தனா – அக்சய் திருமணம்  விமரிசையாக  நடைபெற்றது.

இந்த திருமணத்தில் நடிகர் கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார். மேலும்  தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.