பொன்னியின் செல்வனில் இணைந்துள்ள பார்த்திபன், அமலா பால்……..!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , அனுஸ்கா ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக அவரே பேட்டி அளித்து உறுதி செய்தார்

மேலும் விக்ரம் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது உண்மை தான். நானும் அதில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

தற்போது இந்த பட்டியலில் மேலும் 2 நாயகிகளை இணைத்துள்ளார் மணிரத்னம். ஒருவர் “ஆடை” அமலா பால் மற்றொருவர் ஐஸ்வர்யா லஷ்மி.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை மணிரத்னம் உடன் எடுத்த புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார் பார்த்திபன்.