கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளன.

கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் நான்கு மருந்துகளை மெகா சோதனை முறையில் பரிசோதிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனித்திரு, விழிப்புணர்ச்சியோடிரு, ஆரோக்கியத்துடனிரு என்று கூறும் நடிகர் பார்த்திபன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

“சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன் என கூறியுள்ளார் .