ஒற்றை செருப்பில் வந்து விருது வாங்கிய பார்த்திபன்…!

 

நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து வரும் பார்த்திபன் அவரது வித்தியாசமான படைப்புகளிலொன்றான “ஒத்த செருப்பு சைஸ் 7”படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு “வி அவார்ட்ஸ்” விருது வழங்கியுள்ளனர். விருது விழாவில் விருது வாங்க சென்ற பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (ஷூ) மட்டும் அணிந்து சென்று விருது பெற்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-