தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர் விசு : பார்த்திபன்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 23) மாலை நடைபெறவுள்ளது.

விசு மறைவு தொடர்பாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில்:-

“விசு சார் RIP-தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர். தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர். “உங்கள் மாமனாரைக் கேட்டுப்பாருங்கள்”என்ற வீடியோவை 10 தடவை பார்த்திருப்பேன். அடிக்கோடிட்ட வாதம். மரணத்திற்கு முன்பான சாதனையே மனதோடு ஒட்டிக்கொள்வது அப்படிப்பட்டது விசு சாரின் வாழ்க்கை” என பதிவிட்டுள்ளார் .