இன்றைய சந்திப்பு…நாளைய செய்தியாகலாம் ; பார்த்திபன் – வடிவேலு திடீர் சந்திப்பு..!

பார்த்திபன் – வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் அனைத்துமே மிகவும் பிரபலம்.

நீண்ட நாட்களாகவே திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார் வடிவேலு.

இந்நிலையில் வடிவேலுவைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை, தனது ட்விட்டர் தளத்தில் பார்த்திபன் வெளியிட்டார். அந்தப் புகைப்படம் தொடர்பாக “இன்றைய சந்திப்பு… நாளைய செய்தியாகலாம்!” என்றும் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

இதுகுறித்து தற்போது இயக்குநர் சேரன் ‘பாரதி கண்ணம்மா 2’ திரைக்கதையை எழுதி வருகிறார் என்றும், அதில்தான் பார்த்திபனும் வடிவேலுவும் நடிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.