முஸ்லிம்கள் நிதானத்தை கடைபிடியுங்கள்: ஷியா பிரிவு மதகுரு வேண்டுகோள்

டெல்லி:

நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நத்தி வரும் நிலையில், குடியுரிமை சட்டம், என்ஆர்சி சட்டங்களில் என்ன உள்ள என்று தெரியா மல்,முஸ்லிம்களை கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன, நிதானத்தை கடைபிடியுங்கள்: ஷியா பிரிவு மதகுரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்ஆர்சியில் என்ன உள்ளது என தெரியாமல் ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளவர், அரசியல் கட்சிகள் திசை திருப்புகின்றன, முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்று அறிவித்து உள்ளது. இந்த சட்டத்தால், இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், புதிய குடியுரிமை சட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், லக்னோவைச் சேர்ந்த ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் கூறிய தாவது:

”என்ஆர்சி என்பது அசாம் மாநிலத்தில் மட்டும் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. . இது நாடுமுழுவதும் அமல்படுத்தப்படாது.  இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.  அதுமட்டு மின்றி அதில் என்ன ஷரத்துகள் உள்ளன என்பது பற்றி நமக்கு இப்போது தெரியாது. அதற்குள் முஸ்லிம்கள் எதற்காக போராட வேண்டும்.

அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றன. எனவே முஸ்லிம்கள் இதுபோன்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.