‘கோமாளி’ படத்தை பார்த்த பாட்னர் படக்குழு அதிர்ச்சி…!

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.

இப்படத்தின் கதை திருடப்பட்டது என்று பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி கதையாசிரியர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் . கதையாசிரியர்கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ் நடத்திய பஞ்சாயத்தில், ‘கோமாளி’ குழு திருடப்பட்ட கதை என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.

இதை உறுதி செய்யும் வகையில் ‘கோமாளி’ பட டைடில் கார்டில் கதை கிருஷ்ணமூர்த்தி என்று போட சம்மதம் தெரிவித்ததோடு, கிருஷ்ணமூர்த்திக்கு இழப்பீடாக தொகை ஒன்றையும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இதே கதையில் தான் ‘ஈரம்’ ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் கதையாம், கோமாளி படத்தை பார்த்த பாட்னர் படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியில் உள்ளனர் .

கார்ட்டூன் கேலரி