பீஜிங்:

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சில பகுதிளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரேனா வைரஸ் இன்று உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் கொரோனா தொற்று அறவே ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்த நிலையில், தற்போது சீன தலைநகர் பீஜீங் உள்பட பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அங்குள்ள ஹின்பாடி மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி விற்பனை கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.  அவருடன் தொடர்பில் இருந்த  45 பேருக்கு 2 நாட்களில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

அங்கு சோதனை செய்யப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலே 35 பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவி இருக்கிறது.  நேற்று  ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 6 பேர் உள்ளூர் மக்கள் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதன்காரணமாக   சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப்பகுதிகளில்உள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளது.  மீண்டும் போர்கால எமர்ஜென்சி அறிவுப்புகள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.