சென்னைவாசிகள் கவனத்திற்கு: நாளை 7மணி நேரம் மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம்….

சென்னை:

சென்னையில் நாளை  நாளை (வியாழக்கிழமை)  7மணி நேரம் மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் தடை ஏற்படுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (tangedco) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாளை (ஆகஸ்டு 8ந்தேதி வியாழக்கிழமை) சென்னையின் சில பகுதிகளில் வழக்கமான பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படும் என்றும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 7 மணி நேரம் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்து உள்ளது. பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் விரைவில் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம்:

மத்திய வேளச்சேரி:

வேளச்சேரி மெயின்ரோட்டின் ஒரு பகுதி, 100அடி தரமணி லிங்ரோடின் ஒரு பகுதி, எல்ஐசி காலனி, டான்சி நகர்,  தாண்டீஸ்வரன் நகர்.

அடையார்:

எம்.ஜி.ரோடு, சாஸ்திரி நகர், 9வது மற்றும் 10வது குறுக்குத்தெரு சாஸ்திரி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, செல்லபெருமாள் தெரு, ராஜு தெரு, நேதாஜி தெரு, லால்பகதூர் தெரு, காந்தி நகர் 1வது, 2வது, 3வது, 4வது மெயின்ரோடு பகுதிகள், காந்திநகர் 1வது குறுக்குத் தெரு, மல்லிப்பூ நகர், காமராஜ் அவென்யூ 1வது மற்றும் 2வது தெருக்கள், ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, கேபிநகர் 4வது, 7வது, 8வது மெயின்ரோடு, வெங்கட்ரத்தினம் நகரின் சில பகுதிகள், கனால் பேங்க் ரோடு.

பெசன்ட் நகர்:

டிஎம்எம் தெரு, மகாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை.

கோவிலம்பாக்கம் ஏரியா:

பெரிய கோவிலம்பாக்கம், 200அடி ரெடியல் ரோடு, விநாயகபுரம், காமகோடி நகர், வேளச்சேரி மெயின்ரோடு, ம.சோ.சி. நகர், ஏஜிஎஸ் காலனி, சின்டிகேட் காலனி

கே.கே.நகர்:

கே.கே.நகர், அசோக்நகர், எம்ஜிஆர். நகர், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலத்தின் ஒரு பகுதி, பிருந்தாவன் நகர், நக்கீரன் தெரு, கிண்டியின் ஒரு பகுதி, ஜாபர்கான் பேட்டை, மேற்கு கே.கே.நகர், நெசப்பாக்கத்தின் ஒரு பகுதி, வடபழனியின் ஒரு பகுதி.

ஆவடி:

ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், தேவி நகர், சோழன் நகர், சூளைமேடு மெயின்ரோடு, ஸ்ரீநகர் காலனி, தாமரை நகர், கணபதி நகர், ஸ்ரீனிவாசன் நகர், ஜே.பி.நகர்.

ரெட்ஹில்ஸ்:

ரெட்ஹில்ஸ் ஜிஎன்டி ரோடு, டிஎச் ரோடு, ஆலமரம், எம்ஏ நேகர், ஆர்ஜிஎன் காலனி, காமராஜ் நகர், சோத்துப்பாக்கம் ஒரு பகுதி, டர்காஸ் ரோடு, புதுநகர், பாலாஜி நகர், சாந்தி காலனி, பைபாஸ் ரோடு – ஒரு பகுதி, தீர்த்தகாரயன்பட்டு – ஒரு பகுதி  விஷ்ணு நகர், சிஆர்பி நகர், கிரான்ட்லைன் (Grandlyne), வடகரை, எம்.எச்.ரோடு, கிருஷ்ணாநகர், அழிஞ்சிவாக்கம், கொட்டூர், செல்வ விநாயகர் நகர்,  விளங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள  பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள், இல்லத்தரசிகள் தங்களது வீட்டு வேலைகளை முன்கூட்டியே முடித்து, மின் தடையில் இருந்த தப்பித்துக்கொள்ளுங்கள்…

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 7-hour power cut, chennai 7hour power cut, Power cut Full list
-=-