மக்கள் நீதி மய்யம் 2-ம் ஆண்டு விழா: கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை:

மக்கள் நீதி மய்யம் 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் ரஜினிகாந்த் வாழ்த்து
தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி வருகிறார். ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், கமல்ஹாசன் புதிய கட்சியை ஆரம்பித்தார். மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

இது குறித்து அவர் ட்விட் செய்தியில் குறிப்பிடும்போது, கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதன்முறையாக போட்டியிடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி