பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு சீட் கிடையாது! கர்நாடக மாநில அமைச்சர் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் எந்தவொரு தேர்தலில் போட்டியிட  பாரதியஜனதா கட்சி அனுமதி வழங்காது என்று கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பால தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக எடியூரப்பா இருந்து வருகிறார். மாநில பாஜக மூத்த தலைவரும், மாநில கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக  கே எஸ் ஈஸ்வரப்பா உள்ளார்.


இவர் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட, இந்துக்களின் எந்தவொரு சமூகத்திற்கும் சீட் கொடுக்கலாம்,  யாருக்குக் கொடுக்கலாம் – ஒருவேளை லிங்காயத்துகள், குருபாக்கள், வக்காலிகாக்கள் அல்லது பிராமணர்கள் என எவருக்கும் சீட் கொடுக்கலாம், ஆனால்,  நிச்சயமாக அது முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது என தெரிவித்து உள்ளார்.

ஈஸ்வரப்பாவின் பேச்சு, பாஜகவில் உள்ள இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.