மீர் இயக்கிய படம் பருத்திவீரன். கார்த்தி பிரியாமணி ஜோடியாக நடித்திருந்தனர். அமீர் இயக்கினார். இப்படத்தில் ’ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலைப் பாடியவர் லட்சுமியம்மா. சினிமா, திருவிழாக்களில் பாடிய இவர் தற்போது வறுமையில் வாடுகிறார். சம்பாதித்த பணமெல்லாம் மருத்துவ செலவுக்கே போய்விட்டது, இப்போது மீண்டும் உடல் நிலை பாத்தித்து மருத்துவ செலவுக்கு காசில்லாமல் இருப்பதாக கூறி உள்ளார்.

நாட்டுப்புற பாடகி லட்சும்யம்மா விருது நகர் மாவட்டம் காரியாப்பட்டியில் வசிக்கிறார். ஆஷ்பெஷ்டாஸ் ஹீட் கூறையின் வசிக்கும் இவர் கூறியதாவது:
கிராம்பப் புற திருவிழாக்களில் நாட்டுப் புற பாடல்கள் பாடி வந்தேன். எனக்கு பருத்திவீரன் படத்தில் பாட வாய்ப்பு வந்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் பாட வாய்ப்பு வந்தது. பரவை முனியம்மா வுடன் ஊர் ஊராக என்னை அழைத்துச் சென்று கச்சேரியில் பாட வைத்தனர். சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்ந்து குணம் அடைந்தேன். தற்போது மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்படுள்ளது. எனக்கு 2 மகன்கள். அவர்கள் கூலி வேலை செய்து எனக்கு சாப்பாடுபோட்டார்கள். கொரோனா ஊரடங்கால் அந்த வேலையும் கிடைக்கவில்லை.
உச்ச சாயலில் கத்தி நான் பாடியதில் ரத்த குழாயில் பாதிப்பும், அடைப்பும் ஏற்பட்டி ருக் கிறது. முன்புபோல் பாட முடிய வில்லை. எனது மருத்துவ சிகிச்சைக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு லட்சுமியம்மாள் கூறி உள்ளார்.