கேரள திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகை பார்வதி…..!

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் மத கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி.

கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட கும்பமேளாவால் பல்லாயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஏப்ரல் 23-ம் தேதி கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான திருச்சசூர் பூரத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். திருச்சசூர் வடக்குநாதன் கோவிலை மையப்படுத்தி நடத்தப்படும் பூரம் திருவிழா செண்டமேளம், ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகள், பல லட்சம் பக்தர்கள் என்று பிரமாண்டமாக நடைபெறும்.

இதற்கு திருவிழா கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி. மதவாதிகள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.