மம்மூட்டியுடன் முதல் முறையாக ‘புழு’ படத்தின் மூலம் இணையும் பார்வதி….!

நடிகர் மம்மூட்டியுடன் முதல் முறையாக நடிகை பார்வதி நடிக்கிறார். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘புழு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு வெளியான மம்மூட்டியின் ‘கஸாபா’ படத்தில் மம்மூட்டி பேசிய வசனங்கள் அப்பட்டமாக ஆணாதிக்கச் சிந்தனைகளை, பெண்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதாக நடிகை பார்வதி குற்றம் சாட்டியிருந்தார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பார்வதி கண்டனங்களைத் தெரிவித்து வருவது வாடிக்கை .

இந்நிலையில் ரதீனா ஷர்ஷாத் என்கிற அறிமுக (பெண்) இயக்குநர் இயக்கத்தில் ‘புழு’ என்கிற திரைப்படத்தில் மம்மூட்டியுடன் முதல் முறையாக பார்வதி இணைந்து நடிக்கிறார்.

தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.