“பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்த நடிகர்கள்…” : நடிகை பார்வதியின் பகீர் ஸ்டேட்மெண்ட்.!

Parvathi Menon

மீபகாலமாக சில நடிகைகள், திரைப்படத் துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த துணி்ச்சல் ஹீரோயின்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் நடிகை பார்வதி மேனன்.

மலையாளத்தில் பிரபலமான இவர், ‘பூ’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் அளித்திருக்கும் அதிரடி ஸ்டேட் மெண்ட்:

“மலையாள சினிமாவின் பெரிய ஹீரோக்களும், இயக்குநர்களும்கூட, பட வாய்ப்பு வேண்டு மானால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அழைத்தார்கள். அவர்களது அழைப்பை நான் நிராகரித்துவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார் பார்வதி..

மேலும் அவர், நான் அவர்களுக்கு உடன்படாததால் வாய்ப்பகள அளிக்க மறுத்தர்கள். இதனால் எனக்கு சில காலம் மலையாள உலகில் படங்களே இல்லாமல் இருந்தேன்.  ஆனாலும் நான் கவலைப்படவில்லை.

என்னுடன் படங்களில் நடித்த பல நடிகர்கள் வெளிப்படையாக என்னுடைய உடல் அமைப்பை கிண்டல் செய்தனர். நான் பொறுமையாகவே இருந்தேன். அவர்களை அலட்சியப்படுத்தினேன்.

தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்தபோது இது போன்று நடந்ததில்லை.

எனது சொந்த மாநிலமான கேரளா சினிமாவுலகத்தில்தான் இது போல நடந்தது.

இப்போதும் இது மலையாள சினிமாவுலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது இங்கே யிருக்கும் அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம்…” என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார் பார்வதி.

Leave a Reply

Your email address will not be published.