தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு ஆளான பயணிகள் – மாவட்ட வாரியான பட்டியல்!

சென்னை: மார்ச் 16ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இதுவரை 1,80,062 பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்கள் இப்பட்டியலில் வருகின்றன.

கடந்த 28 நாட்களாக மொத்தம் 2221 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், 22 பேர் மருத்துவமனை தனி வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில், சோதனைக்கு ஆளான மாவட்ட வாரியான எண்ணிக்கைப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பட்டியலைக் காண, இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்: https://t.co/UjtWqgcaNo