பயணிகள் புறக்கணிப்பு எதிரொலி: பிரிமியம் ரயில்களின் கட்டணம் குறைக்க ரயில்வே முடிவு

டில்லி:

பிரிமியம்  ரயில்களின் கட்டணம் அதிகம் என்பதால், அதில் பயணம் செய்வதை பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பிரிமியம் ரயில்களின் கட்டணத்தை குறைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

பொதுமக்களின் போக்குவரத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிமியம் ரயில்களின் கட்டணம் அதிகம் என ஏராளமான புகார்கள் வந்தததை தொடர்ந்து, பிரிமியம் ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நாடு முழுவதும் விசேஷ தினங்கள் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும்  ரயில் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு (2017) பிரிமியம் ரயில்களை ரயில்வே வாரியம் அறிமுகம் செய்தது.

பிரிமியம்  ரயில் முன்பதிவு டிக்கெட் ஆன்லைன் மூலமே  எடுக்க முடியும் என்ற நிலையில், பயணிகள் கட்டணம் சாதாரண கட்டணத்தை விட 100 முதல் 200 சதவிகிதம் வரை உயர்வாகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல, ரயிலைத் தவறவிட்டு விட்டால் பணம் திரும்பப் பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த ரயில்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். அதுபோல ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற சொகுசு ரயில்களின் கட்டணம்  விமானங்களின் கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிமியல் ரயில் கட்டணத்தை பாதியாக குறைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.  பல்வேறு சொகுசு மற்றும் குளிர்சாதன ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள  சுமார் 100 ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைப்பது என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

விரைவில் இந்த கட்டணக் குறைப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.

You may have missed