Random image

வசதியான ரெயில் : பாழாக்கும் பயணிகள்

டில்லி

ரெயில்களில் வசதி இல்லை என கூறும் பயணிகள் வசதி மிகுந்த ரெயில்களை பாழாக்கி உள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரெயில்களில் அடிப்படை வசதிகள் கூட முழு அளவில் இல்லை என்னும் புகார் பொதுவாக கூறப்படுகிறது.   பல பயணிகள் இதை நேரடியாக பார்த்து வருகின்றனர்.   இந்த நிலையை போக்க இந்திய ரெயில்வே பல முயற்சிகளை செய்து வருகிறது.   பயணிகளின் குறைகளை உடனடியாக சரி செய்ய ரெயிலில் பயணிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய ரெயிவ்வே கடந்த மே மாதம் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எல் சி டி தொலைக்காட்சிகள் பயணிகளால்  உடைக்கப்பட்டன.  மேலும் கழிவறைகளில் உள்ள அமரும் இடங்களும் உடைக்கப்பட்டன.   இதனால் இந்திய ரெயில்வே மிகவும் துயர் அடைந்தது.

தற்போது மற்றொரு சீரமைக்கப்பட்ட ரெயிலான பஞ்சவடி எக்ஸ்பிரஸ் நான்கே மாதங்களில் உருக்குலைந்து போய் உள்ளது.   இந்த ரெயிலில் ஒவ்வொரு இருக்கைக்கு அருகிலும் அமைக்கப்பட்டிருந்த சிறு மேஜைகள் உடைந்துள்ளன.   இருக்கையின் கைப்பிடிகளும் தொங்கிக் கொண்டு இருக்கின்றன.   அழகழகாக தொங்க விடப்பட்ட திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு நார் போல் ஆகி உள்ளன.

அது மட்டுமின்றி ரெயிலில் இருந்த பல முகம் பார்க்கும் கண்ணாடிகள் திருடப்பட்டுள்ளன.   கழிப்பறையில் பொர்த்தப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்களும் காணாமல் போய் உள்ளன.   இது குறித்து தகவல் அளித்த இந்திய ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர்  இவைகளை சரி செய்ய சுமார் ரூ. 9 லட்சம் தேவைப்படும் எனவும் இதை தவிர வெற்றிலை எச்சிலால் பாழான ரெயில் பெட்டிகலின் சுவர்களுக்கு புது வண்ணம் பூச தனி செலவகும் எனவும் தெரிவித்துள்ளார்.