சென்னை: 
சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸ் அல்லது டிக்கெட்டை காண்பித்த பிறகு தங்களுடைய வசதிக்கு ஏற்ப வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இந்திய வானூர்த்தி நிலைய ஆணைய (AAI) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் முழு அடைப்பு தொடர்ந்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப, டாக்சி, கார், ஓலா காப் மற்றும் ஊபரை பயண்படுத்தி கொள்ளலாம் என்று AAI  தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் அதனை உறுதி செய்துள்ளது.
சமூக வலைதளத்தில் பலர் இந்த சமயத்தில் விமானநிலையத்திற்கு வருவதும் அங்கிருந்து செல்வதும் மிகவும் கடினமாக உள்ளது என்று கூறி இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணம், திடீர் மருத்துவம் மற்றும் மரணம் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மக்களுக்கு சென்னையிலிருந்து வெளியில் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த முழு அடைப்பு அமலில் உள்ள போது,  விமானங்கள் முன்பு போலவே இயங்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு விமானம் மூலம் வருபவர்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த விதிமுறைகளே  பொருந்தும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும், இ-பாஸ் கட்டாய பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன்,  விமானப் பயனிகள்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், பரிசோதனை முடிவுகளை பொருத்து அவர்கள் தனிமைபடுத்தப்படுவர் அல்லது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.