Random image

பாஸ்போர்ட் சர்ச்சை: சுஷ்மா சுவராஜை விமர்சித்து தொடரும் ட்ரோல்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அலுவலகத்தில் வேலைப்பார்த்து வந்த விகாஸ் மிஷ்ரா பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜை விமர்சித்து சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். நேற்று சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ”இன்டர்ஜான் கியோன்? லிஜியே பிளாக் கர்தியா ( ஏன் தாமதிக்க வேண்டும் ? இங்கிருந்து செல்லுங்கள். உங்களை நான் தடுத்துள்ளேன்)” என்று குறிப்பிட்ட பின்னர் ட்ரோல் செய்தவர்களை சுஷ்மா பிளாக் செய்தார். ட்ரோல் செய்தவர்களை தடை செய்யுமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்ட பின்னர் சுஷ்மா சுவராஜ் இந்த முடிவை எடுத்தார்.

sushma

இந்நிலையில் சுஷ்மா சுவராஜுக்கு மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங். ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி “ சுஷ்மா சுவராஜுக்கு கருத்துக்கு கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. மூத்த தலைவர்களான ராஜ்நாத்சிங் மற்றும் நிதின் கட்கரி ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்தவர்களின் பாதுகாப்பிற்காக சுஷ்மா செயல்பட்டு வருகிறார். இது போன்ற சம்பவங்களுக்காக அவர் பாதுகாப்பு கோரவில்லை. இந்த பிரச்சனையை அவரே சமாளித்துக்கொள்வார்” என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகளை விகாஸ் மிஸ்ரா அவமதித்துள்ளார். இதன் காரணமாக விகாஸ் மிஸ்ராவை கோரக்பூர் பகுதிக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிலர் சுஷ்மா சுவராஜுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுஷ்மா சுவராஜியை விமர்சித்து ட்ரோல் செய்வது துர்திஷ்டவசமானது. அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதை தவிர்க்கவும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில் “ பாஸ்போர்ட் பிரச்சனை நிகழ்ந்தபோது சுஷ்மா வெளிநாடு சென்றிருந்ததாக கூறினார். சுஷ்மாவிற்கு எதிராக விமர்சனங்களை வைப்பர்களுக்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்றத்தின் உறுப்பினரான அவருக்கு ஒவ்வொரு வரும் மரியாதை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.