இஸ்லாம் இளைஞரை மதம் மாறச் சொன்ன பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம்

க்னோ

இஸ்லாமிய – இந்து தம்பதியினரை கேவலமாக பேசியதாக புகார் கூறப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

லக்னோவை சேர்ந்த தம்பதிகளான முகமது அனஸ் சித்திக்கி மற்றும் தான்வி சேத் ஆகிய இருவரும் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பாஸ்போர்ட் நேர்காணலுக்கு சென்றனர்.   அங்கு இருந்த அதிகாரி விகாஸ் மிஸ்ரா என்பவர் இருவரையும்  தாறுமாறாக பேசி சத்தம் போட்டுள்ளார்.    இருவரும்  மதம் மாறாமலும் அவரவர் பெயர்களை மாற்றிக் கொள்ளாமலும் இருப்பதற்காக அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார்.   மேலும் அந்த இளைஞரை உடனடியாக இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறச் சொல்லி உள்ளார்.

அதைத் தொடர்ந்து, தம்பதிகள் இருவரும் இந்த நிகழ்வுகளை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு டிவிட்டர் பதிவின் மூலம் புகார் அளித்தனர்.    அந்த புகாரில் தாங்கள் இருவரும் மதம் மாறாததால் பெயர் மாற்றம் செய்யவில்லை எனவும் கடந்த 12 வருடங்களாக இதே பெயருடன் மகிழ்வுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.   இந்த செய்தி வெளியாகி நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதற்கு உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகம்  நடவடிக்கை  எடுத்துள்ளது.    அந்த அமைச்சகம், “இந்த தம்பதிகளுக்கு ஏற்பட்ட துயருக்கு நாங்கள் வருந்துகிறோம்.  இருவருடைய பாஸ்போர்ட்டுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.  விரைவில் அவை அளிக்கப்பட்டு விடும்.  மேலும் தம்பதிகளிடம் தவறாக நடந்துக் கொண்ட அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என தகவல் தெரிவித்துள்ளது.