அனைத்து எம்.பி தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம்….சுஷ்மா சுவராஜ்

டில்லி:

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த 2014-ம் ஆண்டில் மொத்தம் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் 308 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது 4 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது’’ என்றார்.