நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது…

டெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடு செல்லுபவர்களுக்கு தேவையான பாஸ்போர்ட் சேவை மையங்கள்  இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கில் செய்லபட்டு வருகிறது. தமிழகத்திலும் 11 சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களும் வரும் 31ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏற்கனவே நேர்காணலுக்கு தேதி குறிக்கப்பட்டவர்களுக்கு, புதிய தேதி விவரம் ஏப்ரல் 7ந்தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.