புதுடெல்லி:

மனைவிகளை கைவிட்ட 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும்போது, ” வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்பட்ட மனைவிகளுக்கு நீதி கிடைக்கும் வகையில், அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த மசோதா ராஜ்யசபையில் நிலுவையில் உள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் திருமணத்தை பதிவு செய்வது, 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம், 1973-ம் ஆண்டு கிரிமினல் சட்ட திருத்தம் ஆகியவை இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்.

இந்த மசோதா வெளியுறவுத்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.