தமிழகம் : 4 நாட்களாக 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை

கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புது கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

 

தமிழகத்தில் இன்று புதியதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 1520 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று 46 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆகி உள்ளது.

கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

அவை சேலம், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகியவை ஆகும்.