Random image

முன் பதிவு அறிக்கைகள் ஒட்டுவது முழுவதும் நிறுத்தம் : பயணிகள் வேதனை

டில்லி

னைத்து ரெயில் பெட்டிகளிலும் முன்பதிவு அறிக்கைகள் ஒட்டுவது அடியோடு நின்றதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளின் பயணிகளின் முன்பதிவு விவர அறிக்கைகள் ஒவ்வொரு பெட்டியிலும் ஒட்டப்பட்டு வந்தன.   பயணிகள் ரெயில் ஏறுமுன் அதை பார்த்து தங்கள் இருக்கைகளை உறுதிப்படுத்துக் கொள்ள அது மிகவும் வசதியாக இருந்தது.

காகித செலவை கட்டுப்படுத்தவும் பசுமை இந்தியா திட்டத்தை முன்னிட்டும் இந்திய ரெயில்வே டில்லி, ஹசரத் நிஜாமுதீன், மும்பை செண்டிரல், சென்னை செண்டிரல், ஹௌரா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் ரெயில்களில்  அறிக்கைகள் ஒட்டுவதை நிறுத்தியது.

பிறகு அது சிறிது சிறிதாக மும்பை, சென்னை மற்றும் பல நகரங்களில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.   தற்போது நாட்டில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் எந்த ஒரு ரெயிலிலும் அறிக்கைகள் ஒட்டப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் மிகவும் துயருற்று வருவதாக பலபயணிகள் தெரிவித்துளனர்.