ஓரினச்சேர்க்கை எதிர்த்து கோவை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகர் கூச்சல்… பரபரப்பு
கோவை:
ஓரின சேர்க்கைகைகு எதிர்ப்பு தெரிவித்து, கோவை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகர் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை சேர்ந்த மத போதகர் ஜெபர்சன் என்பவர் ஓரின சேர்க்கை வேண்டாம்.. இதனால் உலகமே அழிந்து விடும் என கோவை நீதிமன்றத்தில் கூச்சல் போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை கோர்ட்டு வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி னர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஓரின சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கி உச்சநீதி மன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் ஓரினச்சேரிக்கை சட்டப்பூர்வ மாக்கப்பட்டது. இது இயற்கைக்கு முரணானது என ஒரு தரப்பினர் எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கத்தி கூச்சலிட்டார். அப்போது, அவர் ஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்தால் தேசம் குட்டிசுவராகி விடும். ஓரின சேர்க்கை மகா பெரிய குற்றம். ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். ஓரின சேர்க்கை இந்த சமுதாயத்தை சீரழித்துவிடும். ஓரின சேர்க்கை இந்த தேசத்தை பாழாக்கிவிடும் என்று மூச்சு விடாமல் கூறி உள்ளார்.
மேலும், ஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்த பட்டணம் ஒன்றை கடவுள் அக்கினியால் அழித்தார். அந்த நகரத்தின் அழிவிற்கு ஓரின சேர்க்கைதான் காரணம். ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் செய்யும் திருமணத்திற்கு யாரும் இடம் கொடுத்து விடாதீர்கள், எல்லாரும் மனம் திருந்துங்கள் என்று கூறினார்.
கிறிஸ்தவ பாதிரியாரின் கூச்சலால் அங்கே சில நிமிடமும் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.