வழக்கு எதிரொலி : சோப் பெயரை திரும்பப் பெற்ற பதஞ்சலி

மும்பை

யர்நீதி மன்ற வழக்கு காரணமாக தனது சோப்பின் பெயரான ஓஜஸ் என்பதை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தனது சோப்புக்கு ஓஜஸ் என்னும் பெயர் வைத்தமைக்கு எதிர்த்து சரக் ஃபார்மா என்னும் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது,   சரக் ஃபார்மா தான் தயாரிக்கும் மூலிகை மாத்திரைகள் மற்றும் டானிக்குக்கு ஏற்கனவே ஓஜுஸ் என்னும் பெயர் வைத்திருந்ததால் இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது,   இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் ஓஜஸ் என்னும் பெயரை பதஞ்சலி உபயோகப்படுத்த கூடாது என சரக் ஃபார்மாவின் வழக்கறிஞர் கூறினார்.   இதற்கு ஒப்புக்கொண்ட பதஞ்சலி நிறுவனத்தின் வழக்கறிஞர் ஓஜஸ் என்னும் பெயரை இனி உபயோகப் படுத்த மாட்டோம் என உறுதி கூறினார்.

தாங்கள் இந்த பெயரை 2014லில் இருந்தே உபயோகப்படுத்தக் கூடாது என தீர்மானித்ததாகவும் சில இணைய தளங்கள் தங்களின் பொருட்களுக்கு தவறாக இந்தப் பெயரை பயன்படுத்தி விட்டதாகவும்,  இனி இதுபோல நடந்துக் கொள்ள மாட்டோம் என நிறுவனத் தலைவர் பாபா ராம்தேவி தெரிவித்துள்ளார்.