பதஞ்சலி பொருட்கள் தரமற்றவை! ஆர்டிஐ பகீர் தகவல்!!

டில்லி,

பாபா ராம்தேவ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் பொருட்களில் 40 சதவிகித பொருட்கள் தரமற்றவை என்று தகவல் உரிமை சட்டத்தில் பகிர் தகவல்களை தெரிவித்து உள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் சில பொருட்கள், தரக்குறைவானவை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் பதஞ்சலி தயாரிப்புகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வரை  82 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதாகவும், .

அதில், அம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் உள்பட 31 தயாரிப்புகள் தரமற்றவையாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் வந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதஞ்சலி தயாரிப்புகளில் 31.68 சதவிகிதம் அந்நிய நாட்டு வேதிப்பொருட்கள் கலந்துள்ளதும் ஆய்வின்போது தெரிய வந்ததாகவும் ஆர்டிஐ கூறி உள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆயுர்வேதத்தின் படி தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டதாக பதிலில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் பதஞ்சலி நிறுவன பொருட்கள் உள்பட 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவை தரக்குறைவானவை என்றும் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதஞ்சலி பொருட்களை தவிர, ஆயிவ்தாவ சர்ணா, தாலசியா சர்னா, புஷ்ய்யுகூ சர்னா, லவன் பாஸ்கர் சர்னா, யோகராஜ் கங்குலு, லக்ஷ கங்குலு போன்ற  18 ஆயுர்வேத மருந்துகளும் தரமற்றவை என்று தெரிய வந்துள்ளதாக கூறி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆயுதப்படை வீரர்களுக்கான கேன்டீனில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தபோது இந்த விவரம் தெரிய வந்ததாகவும் கூறி உள்ளது.

பதஞ்சலி தயாரிப்புகள் தரமில்லை என்று ஆர்டிஐ அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.