பெங்களூரு சி்ன்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த IPL 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. கொல்கத்தா அணிக்காக கம்பீர் ஆடிய 100-வது ஆட்டம். டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கெய்ல் ஆகியோர் களம் இறங்கினார்கள். கோல்கட்டா தொடக்க பந்து வீச்சை மிகவும் துல்லியமாக வீச இதனால் பெங்களூரு அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறியது.  அதிரடி வீரர் கெய்ல் 7 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்து வீச்சில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
images
விராட்கோலி ராகுல் ஜோடி சுனில் நரின மற்றும் சவால பந்துகளை அதிரடி ஆட்டம் மூலம் 12.1 ஓவர்களில் பெங்களூரு அணி 100 ரன்னை கடந்தது.  லோகேஷ் ராகுல் 32 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் சச்சின் பேபி, ஷேன் வாட்சனுடன் மற்றும் பின்னி பந்தை அதிரடி ஆட்டம் அட பெங்களூரு 185 ரன்கள் எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய கொல்கத்தா ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 69/4 என்ற மோசமான நிலையில் இருந்தது. யூசுப்பதான்– ரஸ்சல் ஜோடி 5–வது விக்கெட்டான அதிரடியாக விளையாடி ஆட்டத்தை கோல்கட்டா வெற்றி பாதையில் கொண்டு சென்றனர். இந்த ஜோடி எழு ஓவர் இல் 96 ரன் குவித்து கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யூசுப்பதான் 29 பந்தில் 60 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ரஸ்சல் 24 பந்தில் 39 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். இந்த தோல்விக்காக பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட் கோலி காரணம் என கூறியுள்ளார்