அகமதாபாத்: இந்தியாவிலேயே சிங்கங்கள் வாழும் ஒரே இடமான குஜராத்தின் கிர் பகுதியில், வனத்தை விட்டு வெளியேவரும் சிங்கங்கள், இறந்துபோன வீட்டு விலங்குகளின் மாமிசத்தை உண்ணும் அவல நிலை நிலவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியாவில் ஆசிய சிங்கங்களுக்கான ஒரே புகலிடமாய் இருப்பது கிர் காடுகளே. சிங்கங்களின் உணவாக காட்டுக்குள் இருப்பவற்றில் 75% வேட்டையாடப்படும் விலங்குகள். அதேசமயம், காட்டுக்கு வெளியே அவற்றின் உணவில் 70% வீட்டு விலங்குகள்.
இந்த 70% என்ற அளவில் 20% மட்டுமே.

வேட்டையாடப்படுகின்றன. மீதமுள்ள 50% உணவு நோய் மற்றும் வயோதிகத்தால் இறந்த விலங்குகளின் இறைச்சியே. இதன்மூலம் பல்வேறான ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் நேர்கின்றன என்று எச்சரிக்கப்படுகிறது.

இறந்த விலங்குகளை உண்பதால், ஆட்கொல்லி வைரஸ்கள் தொற்றும் அபாயமும் நேர்கிறது. கடந்தாண்டு கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்கி கிர் காட்டுப் பகுதியில் 29 சிங்கங்கள் இறந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த விலங்குகளை வனப்பகுதியில் வீசியெறியக்கூடாது என்று வனத்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வேட்டையாடும் பழக்கத்தை மெல்ல மறந்து, இப்படியாக வீட்டு விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் இறந்துபோன விலங்குகளை உண்ணப் பழகும் சிங்கங்கள் நீடித்த வாழ்வதே கடினம் மற்றும் இந்த நிலை சிங்கம் – மனித மோதல்களையும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.