ராஞ்சி: 

ல்லுவின் மருத்துவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யபட்டுள்ளது.

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்திகளின் படி, ஜார்கண்டில் உள்ல ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டு டாக்டர் உமேஷ் பிரசாத் கட்டுப்பட்டில் இருந்தது என்பதும் இவர் லல்லு பிரசாத் யாதவிற்கு சிகிச்சை அளித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்புக்குள்ளான வயதான நோயாளி, கடந்த 15 நாட்களாக ரிம்ஸில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து, ​​ரிம்ஸ் நிர்வாகம் அதன் அனைத்து மருத்துவர்கள், நர்சிங் ஊழியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த்ப்படும் என்று கூறியுள்ளது. மேலும் அந்த வார்டில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தேவைப்பட்டால் லாலு பிரசாத் யாதவின் மாதிரியும் சேகரிக்கப்படும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் விவேக் காஷ்யப் தெரிவித்தார்.

இருப்பினும், லாலு பிரசாத் யாதவ் கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்தார். ஆர்ஜேடி தலைவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், குப்தா தெரிவித்தார்.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்தற்காக டாக்டர் உமேஷ் பிரசாத் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும் என்றும், லாலு பிரசாத் யாதவுடன் கொரோனா தொற்று இருந்தால் மட்டுமே அவருக்கு ரிம்ஸ் நிர்வாகம் அழைப்பு விடுக்கும் ”என்று பன்னா குப்தா கூறினார்.

தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற பின்னர் லாலு பிரசாத் யாதவ் ரிம்ஸில் அனுமதிக்கப்பட்டார். சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, அவர் சிறந்த மருத்துவ உதவியைக் கோரிய பின்னர் அவர் ரிம்ஸுக்கு மாற்றப்பட்டார். யாதவுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் உள்ளன. அவரது சிறுநீரகம் அதன் திறனில் 40 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே செயல்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்புள்ளதால், அவரை கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் அவரைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்று பல ஆர்ஜேடி ஆதரவாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த நேரத்தில் தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த தனது கவலையை அளிப்பதாக அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.