உடல்நலக் குறைவு ஏற்பட்ட கோவிட் -19 தடுப்பு மருந்து சோதனை பங்கேற்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவுள்ளார்: அஸ்ட்ராஜெனிகா

அஸ்ட்ராஜெனிகாவின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பங்கேற்பாலருக்கு கடுமையான நரம்புக் கோளாறுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் உலக அளவிலான சோதனைகள் இடைநிறுத்தப்பட்டன. கடந்த புதன்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், அப்பெண் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவரது உடல் நிலை முன்னேறி வருவதாகவும் அநேகமாக அதே புதனன்று வீட்டிற்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாவும் அறிவிக்கப்பட்டது. அஸ்ட்ராஜெனிகா மருத்துவ பரிசோதனைகளின் தரவு மற்றும் பாதுகாப்பு கூறுகளை மேற்பார்வையிடும் நல வாரியம், பங்கேற்பாளருக்கு  அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதை உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து மருந்தின் மருத்துவ மற்றும் மனித பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு இருப்பதையும் உறுதி செய்தனர்.  மேலும் சோதித்ததில், அந்த பங்கேற்பாளருக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்றும், இதற்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதற்கும்  எவ்விததொடர்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிறுவன அதிகாரிகள் சாத்தியமான தடுப்பு மருந்தின் பாதுகாப்பை நிறுவனம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, இடைநிறுத்தம் குறித்த அஸ்ட்ராஜெனிகாவின் அறிக்கைகள் பொதுவாகவே விரிவானதாக இல்லை. உதாரணமாக, பங்கேற்பாளர்களிடையே ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக சோதனைகள் நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்பதை நிறுவனம் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.

கடந்த புதன்கிழமை, நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்  அஸ்ட்ராஜெனிகா சுயமாக செயல்படும்  நிபுணர்களின் குழுவினால் பரிசோதனைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், அவர்களால் அது வழிநடத்தப்படும் வழிநடத்தப்படும் என்று கூறியது.

மேலும், “எங்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தின் ஆரம்ப நிலையிலேயே நங்கள் பாதுகாப்பான தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க விருக்கிறோம். இந்த நெருக்கடியில் இருந்து இலாபம் பெறுவதற்காக அல்ல, “ என்றும் கூறப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகாவின் மூன்றாம் கட்டத்தின் முதல் சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.