டில்லி

ய்ம்ஸ் வாசலில் சிகிச்சைக்கு காத்திருக்கும் ஏழை நோயாளிகளுக்கு உதய் என்னும் ஒரு தொண்டு நிறுவனம் உணவளித்து வருகிறது.

பீகார் மாநிலம் தர்பாங்காவை சேர்ந்தவர் 42 வயதான ராம்சிங்.  இவர் மகன் மோகன்.  ராம்சிங் தனது கிராமத்தில் ஒரு சிறு கடை நடத்தி தினம் ரூ200-300 சம்பாதிக்கிறார்,   பத்து வயதான மோகனுக்கு இருதய நோய் காரணமாக சிகிச்சை அளிக்க ஆறு மாதம் முன்பு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார் ராம்சிங்.  அவரிடம் அக்கம் பக்கத்தில் கடனாக வாங்கிய ரூ 30000 மட்டுமே இருந்தது.  விசேஷ சிகிச்சை மோகனுக்கு மருத்துவமனையில் தரப்படுகிறது.  ராம்சிங் மகனை தனியே விட முடியாமல் தங்க இடமின்றி மருத்துவமனை வாயிலில் நடைபாதையில் தங்கி வருகிறார்.

இவர்கள் வெறும் சாம்பிள் மட்டுமே,  ஆனால் உண்மையில் இது போல பலர் எய்ம்ஸ் வாசலில் தங்கி வருகின்றனர்.  அனைவரும் வெளியூரில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்கள்.  ஒவ்வொரு தினமும் ஒரு பரிசோதனை, மற்றும் சிலருக்கு அறுவை சிகிச்சைகாக காத்திருக்க வேண்டி இருத்தல் போல பல சங்கடங்கள்.   அந்த ஏழை மக்களிடம் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்பி வர பணம் இருப்பதில்லை.  அந்த செலவுக்கு பயந்து மருத்துவமனை வாசலில் நடைபாதையில் தங்குகிறார்கள்.

ஆனால் அடிப்படை தேவைகளான, உணவு மற்றும் குடிநீருக்கும் தவித்து வருகின்றனர்.

உதய் ஃபவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனம் தனது வேன் மூலம் அங்குள்ள நோயாளிகளுக்கும், அவர்களுடன் உள்ளவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது.  இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அந்த உணவை வாங்க வரிசையில் நிற்கவும் தெம்பு இன்றி பலர் உள்ளனர்.

தற்போது எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனைகளில் உதய் ஃபவுண்டேஷன் வாரம் இருமுறை உணவளித்து வருகிறது.   நிதி உதவி கிடைத்தால் இன்னும் அதிக நாட்கள் உணவு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நன்கொடைகளுக்கு 80G மூலம் வரிவிலக்கு கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இரக்க உள்ளம் படைத்தோர் உதவலாமே

Bank name: HDFC Bank
Branch: Adchini, New Delhi 110017
Account name: UDAY FOUNDATION FOR CDRBG TRUST
Type: Savings A/C No. 03361450000251
IFSC Code: HDFC0004397

Please send the details, after you have made the donation, to help@udayfoundationindia.org, along with your complete address and PAN card no, enabling us to send a 80G tax exemption receipt of the same. Non-Resident Indians are also requested for scanned copies of their passports.

மேலே உள்ளது அந்த தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோள்.

பொறுப்பு துறப்பு :

மேலே உள்ளது அந்த தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோள்.  பத்திரிகை.காம் நிறுவனத்துக்கும் இந்த தொண்டு நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது.  நிதி அளிக்கும் முன்பு விசாரித்து செயல்படுமாறு பத்திரிகை.காம் கேட்டுக் கொள்கிறது.