Random image

வார ராசிபலன்: 17.04.2020  முதல்  23.04.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

இத்தனை காலமாய் இருந்துக்கிட்டிருந்த பிரச்னைங்களும், டென்ஷன்களும், கவலைங் களும், கஷ்டங்களும் மெல்ல மெல்லப் புகை மாதிரி மறைஞ்சு போயிடுங்க. பயணம் பற்றிய கவலைகளைத் தவிர்க்க முடியாது. குடும்பம் சார்ந்த விஷயங்களை நீங்க பேசும் போதும், கருத்து தெரிவிக்கும் போதும் மிக கேர்ஃபுல்லா இருப்பது அவசியமுங்க. வார்த்தையில் கவனம் தேவை. பிராமிஸ் செய்யும்போ போது உங்களால் முடியும் என்றால் மட்டுமே வாக்குக்குடுங்க.  இல்லாட்டி குடுக்காதீங்க. வேண்டாம். அது சிக்கலை உண்டுபண்ணி  மேலும் டென்ஷன் ஏற்படக் காரணமாகும். பணம் சார்ந்த விஷயங்களில் ரொம்பவே கவனம் தேவை. நினைப்பதும், நடப்பதும் வேறாக இருக்கலாம். ஆடம்பர செலவுங்க இப்போதைக்கு வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது பெட்டர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

அலுவலகத்தில் பணம் கையாளும் வேலை என்றால்.. பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை  செய்யாதீங்க. நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கீங்க. கவலை வேணாம். உங்க அயராத உழைப்பின்காரணமாய் அது நிறைவேறும். தடைப்பட்டு வந்த காரியங்கள் வேகம் எடுக்கும், குழதைகளின் திருமண விஷயம், கல்வி சார்ந்த விஷயங்கள் சிறப்பாக நிறைவேற, தொடங்குவதற்கான காலம். பொருளாதாரப் பிரச்சினைகள் சரியாகும். தொழில், வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகளுக்கு மிக கரெக்டான நல்ல காலம். வேலைப்பளுவை ஈஸியா சமாளிப்பீங்க. உணவு எடுப்பதில் கவனமாய் இருங்க. தீயபழக்கத்தையெல்லாம் உதறித் தள்ளுவதன்மூலம்  உடல் நலனை கவனிப்பது நல்லதுங்க. உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இருந்த மன கசப்பு நீங்கும். சேமிப்பு அதிகரிக்கும். தள்ளிப்போன சுப விரைவில் நடக்கத்தான் போகுது. வருமானம் குறையக்கூடும்.

மிதுனம்

தொழில் சார்ந்து நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள், முதலில் டென்ஷன் கொடுத்தாலும் பிற்காலத்தில் நல்ல பலனைத் தருமுங்க. லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் பணி இடம் மாற்றம்,  பதவி உயர்வு  தட்டிப்போயிக்கிட்டிருந்ததில்ல.. அவையெல்லாம் உறுதிப்படுத்தப் படும். உங்க கவனக்குறைவு காரணமாய் மூட்டு சார்ந்த பிரச்னை ஏற்படலாம். வீட்டில் திட்டமிட்டபடி சுப நிகழ்வுகள் நடக்கும்.  அலுவலகவாசிகளைப் பொருத்த வரையில் உழைக்கும் வலிமை அதிகரிக்கும்.  பெண்களுக்கு வீடு, வாசல், சொத்துக்கள் வந்து சேரும். குடும்பம் சார்ந்த தேக்கநிலை மாறிப் படிப்படியாக முன்னேற்றம் தெரியவரும். .கொடுத்த வாக்கைக்  காப்பாற்றுவீங்க. இதனால் நல்லபெயர் எடுப்பீங்க மேலதிகாரிங்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலும். திருமணமாகிப் பலகாலம் குழந்தை இல்லாத இந்த ராசிப் பெண்களுக்குக் குழந்தை வரம் கிடைக்கும். வெளிநாட்டுக் கல்வி முயற்சிகள் வெற்றியடையும்.

கடகம்

புதிய தொழில் தொடங்கும் முயற்சி சிறக்கும். அலுவலகவாசிகளுக்கும்கூடப் புதிய வாய்ப்பு கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். அரசாங்க அனுகூலம் உண்டாகுமுங்க. திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு இத்தனை காலம் டல்லாக இருந்ததல்லவா, அந்நிலைமாறிப் புதிய ஒப்பந்தங்கள் ‘சைன்’ பண்ணுவீங்க.  இது வெறும் ஆரம்பம்தாங்க. பெரிய அளவில் புகழ்பெறுவதற்கு இது ஒரு விதைதான். முன்கோபம், பதற்றம் ஏற்படலாம். அதனால் விட்டுக் கொடுத்தலும், கவனமாக பேசுதலும் அவசியம் தேவைங்க. வாக்குக் கொடுப்பதை  டோட்டலாய்த் தவிர்த்துடுங்க. பொருளாதாரம் சம்பந்தமான  முடிவுகள் எடுக்கும் போது மிக கவனமாக இருப்பது நல்லது.  என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் காதல் துணை உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார். வேலையில் உள்ளவங்களுக்கு சமீபத்திய சாதனைக்காக சகாக்களின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 17.04.2020 முதல் 19.04.2020

சிம்மம்

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், சுபகாரியங்கள் அனுகூலம் தரும். உத்தியோகத்தில் நல்ல அனுகூலம், மாற்றம் உண்டாகுமுங்க. உடல் நலத்தைப் பொருத்த வரையில் முன்பைவிட பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் காணும். நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கிகாரம் கிடைக்கும்.  உழைக்கும் வலிமை அதிகரிக்கும். வீடு, மனை பாக்கியம் உண்டாகுமுங்க. மனதை அரித்துக்கொண்டிருந்த கவலைகள் படிப்படியாகக் குறைவதற் கான அடையாளங்கள் தென்படும். எடுத்தேன் கவிழ்த்தேன் கொட்டினேன் என்று அவசரமாக எதையும் செய்யக்கூடாது. உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை ஆலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். எதுவுமே நினைத்த வேகத்தில்  நடக்கவில்லையே என்று புலம்பாதீர்கள். கட்டாயம் நல்லபடியாக முடியம். அதற்குரிய அவகாசத்தைக் கொடுங்கள்.

சந்திராஷ்டமம் : 19.04.2020 முதல் 22.04.2020

கன்னி

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மிக அதிகமாக நடக்குமுங்க. பொருளாதார முன்னேற்றம், தைரியம் உண்டாகுமுங்க. உறவில் நெருக்கம் உண்டாகுமுங்க. தொழிலில் மாற்றங்களைப் பெறப்போறீங்க பாருங்களேன். உடல் ஆரோக்கியம் நன்றாகத்தான் இருக்கும். ஆனா நீங்க தேவையில்லாம அதுபற்றி பயந்து நடுங்கறது மட்டுமில்லாம, உங்களுக்கு வேண்டியவங்களையும் டென்ஷன் பண்ணுவீங்க. ப்ளீஸ். வேணாமே.   சுணங்கிக் கிடந்த வேலைங்கள்ளாம் வேகமா நடந்து முடியுங்க. ரொம்ப காலமா நீங்க கனவு கண்டுக்கிட்டிருந்த வீடு, மனை பாக்கியம் உண்டாகுமுங்க. முயற்சி செய்பவர்கள் புதிய வேலைவாய்ப்புப் பெறுவீங்க. முன்பைவிட உங்க தந்தையின் உடல் ஆரோக்கியம் நல்லபடியா ஆயிடும். கஷ்டமான சூழலிலிருந்து உங்க புத்திசாலித்தனத்தாலும் திறமையாலும் ஈஸியா வெளியில் வந்துடுவீங்க.

சந்திராஷ்டமம் : 22.04.2020 முதல் 24.04.2020

துலாம்

அரசாங்கம் மூலம் பலகால எதிர்பார்ப்பிற்கப்புறம் இப்போது அனுகூலம் உண்டாகுமுங்க. பெரிய அதிகாரிகள் மற்றும் பிரபலஸ்தர்களின் நட்பு பல நன்மைகளை தரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகுமுங்க. மேலிடத்தின் கருத்து வேறுபாடு நீங்கும். புது முயற்சியில் வெற்றி பெறுவீங்க. மம்மிக்கும் உங்களுக்கும் ஃபைட் சீன் வராம பார்த்துக்குங்க. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். எதிர்பாலினத்தினரிடம் கவனமாக செயல்படணுங்க. எதிர்பார்த்த நிகழ்வுகள் கேன்ஸல் ஆவதால்  சின்ன ஏமாற்றங்கள் இருக்கும். நீங்கள் மதிக்கும் பெரியவங்களைச் சந்திப்பீங்க. வாகனம் பற்றிய டென்ஷன் ஏற்பட சான்ஸ் இருக்கு. சகோதர சகோதரிகளுடன் அனுசரிச்சுக்கிட்டு அட்ஜஸ்ட் செய்து போனால் குறைஞ்சா போயிடுவீங்க. கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்படாமலும்.. அப்படி ஏற்பட்டால் வார்த்தையை வளர்த்தாமலும் இருக்கப் பாருங்க.

விருச்சிகம்

குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். அது பற்றி இவ்ளோ காலம் இருந்துக்கிட்டிருந்த தடைகள் நீங்கும். மருத்துவ செலவுகள் குறையும். மம்மியின் உடல் ஆரோக்கியம் முன்பை விட நல்லாயிடும். வாழ்க்கை துணையுடன் இருந்துக்கிட்டிருந்த பிணக்குகள் நீங்கும். ரொம்ப காலமாய்த் தாமதப்பட்டுக்கிட்டிருந்த சொத்து வந்து சேரும்.  தொழில் சார்ந்து முடிவுகள் எடுக்கும் போது நீண்ட ஆலோசனை தேவை. அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும்கூட நல்லபடியாவும் வெற்றிகரமாகவும் முடியும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.  அரசாங்க அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் சார்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்குமுங்க.  மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடக்கலாம். தைரியம், தன்னம்பிக்கை மட்டும் குறையாமல் கண்டிப்பா கேர்ஃபுல்லா இருங்க.

தனுசு

இதுவரை வீடு வாங்காதவங்க , வீடு, மனை வாங்கப்போறீங்க. அதுக்கான யோகம் ஏற்படப்போகுதுங்க. உடல் ஆரோக்கியம் நல்லாவே இருக்கும். டாடி பற்றிய விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். வாழ்க்கையில் இதுவரை செய்யாத சாதனை ஒன்றை.. நல்ல முயற்சி எடுத்துச் செய்வீங்க. பெண்களுக்கு லாபம் கிடைக்கும். மருத்துவத் துறையில் ஒர்க் பண்றவங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்பைவிட மனமாற்றம் நிகழ்ந்து … தர்மங்கள் செய்வீங்க. சேவை பிரிவில் இருப்பவர்கள் சில சின்னச் சிக்கல்களைச் சந்திக்க நேரலாம். பிசினஸ் செய்யறவங்களுக்கு, லாபம் உடனடியாக கிட்டாமல் போனாலும் பொறுமையா .. பொறுப்பா நடத்திக்கிட்டே போனால், நிரந்தரமான நன்மை கிட்டும். காதல் வாழ்வில் மகிழ்சி பொங்கும். மன அமைதியிருப்பதால் நல்ல முயற்சியுடன் எதயும் சாதிப்பது எளிது என்பதை மட்டும் நல்லா நினைவில் வெச்சுக்குங்க.

மகரம்

இந்த வாரம் லாபகரமானதுதாங்க . உங்கள் வாழ்க்கை அனைத்து வகையிலும் சிறப்பாக அமையும். உங்கள் துணையுடனும் மற்றவர்களுடனும் இணக்கமான சூழல் உருவாகும். அரோக்கியத்தை பொறுத்த மட்டில் கொஞ்சம் அதிக கேர் எடுக்கணும். அலுவலகவாசிகள் தங்கள் வேலையில் மிகுந்த  கவனம் செலுத்தி, சிரத்தையாய்ச் செயல்பட வேண்டும். ஆரோக்யமற்ற உணவுகளை தவிர்க்கணுங்க. உங்கள் பொருளாதார நிலையை பொருத்தமட்டில் நோ பிராப்ளம். செல்வம் பெருகும் எனவே வங்கியிருப்பும் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்தாலும் பணியாளர்களாயிருந்தாலும் லாபம் அதிகரிக்கும். சமுதாயத்தில் பெயர், புகழ் மற்றும் நன்மதிப்பு அதிகரிக்கும். காதல் வாழ்வின் நிலை சுமுகமாகவே இருக்கும். மாணவர்களின் முயற்சி வெற்றியடையும்.

கும்பம்

சோம்பலைக் குறைச்சுக்குங்க. சுறுசுறுப்புடன் செயல்படுங்க. கேளிக்கை மற்றும் உற்சாகத் தில் கவனம் செலுத்திப் பொழுதை வேஸ்ட் செய்ய வேண்டாம். கொஞ்ச காலத்துக்குப் பணத்தைச் சிக்கனமாய்ச் செலவழிச்சுப் பாதுகாப்ப இருங்க. பிறகு முதலீடுகள் செய்ய தொடங்கலாம். இப்போ அவசரம் வேணாங்க. கணவன் மனைவிக்கிடையே, கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாங்க. இயந்திரப் பணியில் உள்ளவங்க சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். அலுவலகம் சம்பந்தமான விஷயங்கள் தள்ளிப்போவது பற்றி டென்ஷன் ஏற்படும்.  வெயிட். வெயிட். எல்லாம் சரியாகும்.  அக்கம்பக்கத்தின ரிடையேயும், அலுவலகத்திலும் உங்க கோபத்தைக் கட்டுப்படுத்திக்கணுங்க. வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சுமூகமாக இருக்கப் பாருங்க. குழந்தைங்களுக்கு டென்ஷன் ஏற்படாம நடந்துக்குங்க. அவங்க உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினால் புன்னகையுடன் சமாளிச்சுக்கிட்டுப் போங்க. எல்லாம் விரைவில் சரியாகும்.

மீனம்

தொட்டதெல்லாம் துலங்கும் என கூறமுடியாது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் நடந்து அந்த பிரச்சினைகளை சமாளியுங்கள். குடல், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் தோன்றலாம். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றலாம். பொருளாதரம் சாதாரணமாக இருக்கும். பணியின் ஆரம்பகட்டத்தில் பிரச்சினைகள் தோன்றலாம். எனினும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. பணியில் ஏற்படும் முன்னேற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து வாழ்வை வளப்படுத்தும். மீன ராசி வணிகர்களுக்கு வெற்றி கிட்டும். புதிய பிசினஸ் பார்ட்னர்களுடன் ஒப்பந்தம் ஏற்படலாம். காதல் வாழ்க்கை சரியான திசையில் செல்லும்.  சில காலத்துக்கு முன்பு படிப்படியாக உயர்ந்த பயம் கவலையும் சிரமங்களும் இப்போது படிப்படியாகக் குறையக் காண்பீர்கள்.