வார ராசிபலன்: 22.02.2019 முதல் 28.02.2019 வரை!  வேதா கோபாலன்

மேஷம்       

ஹலோ.. எல்லா வகையிலும் சூப்பரா இருக்கும் நீங்க ஏங்க கோவம் வந்தா நிதானம் இழக்கறீங்க? இந்த வாரம் அந்த மூன்றெழுத்துக் கோபம் சற்று அதிக உப்பு உறைப்புடன் இருக்கப்போகுதுங்க. கவனமா இருந்துக்குங்க. சகோதர சகோதரிங்க கூட நல்ல முறையில் உறவு இருக்கும். நீங்க அதிகமா விட்டுக்கொடுத்துப் போறீங்க. வெரிகுட். விட்டுக்கொடுத்தவங்க கெட்டுப் போவதில்லைன்னு பழமொழியே இருக்கே. வயிறு சம்பந்தமான டென்ஷன்ஸ் கொஞ்சம் இருக்கும் (நான் வயிற்றெரிச்சலைச் சொல்லவில்லை. ஆரோக்யம் சம்பந்தமான பிரச்சினையைச் சொன்னேன்) இரண்டுமே இல்லாமல் பார்த் துக்குங்க. திடீர் அதிருஷ்டம் கட்டாயம் உண்டு. எதிர்பார்த்திருக்கவேயில்லை தானே நீங்க. ஜாலி. என்ஜாய்.

சந்திராஷ்டமம்:  25.02.2019 முதல் 28.02.2019 வரை

ரிஷபம்

செம செம அதிருஷ்ட காலம் இது. அலுவலகத்தில் கிங்கரர்கள் மாதிரி இருந்த உயர் அதிகாரிங்கள்ளாம் உங்களைக் கூப்பிட்டுப் புகழ்மாலை சூட்டுவாங்க. மிக நெருங்கியவங்களைக் கொஞ்சமே கொஞ்ச காலத்துக்கு நல்ல காரணத்தி னால் பிரிய வேண்டி வரலாம். டென்ஷன் ஆவாதீங்க. ஆரோக்யத்தை மிக மிக ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க. வாகனத்தை நிதானமாய் ஓட்டுங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்குச் சின்னதாய் ஒரு தடை ஏற்பட்டு.. பிறகு அது விலகி ஜம்மென்று தொடர்ந்து பயணிப்பீங்க. குடும்பத்தில் யாரேனும் வெளிநாட்டுக்குப் பயணம் போவாங்க. கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும். அது வெளிநாட்டு அரசாங்கமாகவும் இருக்க வாய்ப்பிருக்குங்க. புத்திசாலித் தனம் மிக உதவுவதால் எந்த வேலையிலும் நல்ல பெயர்தான். கவர்ச்சி  அம்சம் எப்பவும் உண்டு. எதிர்பாலினத்தினரை எப்பவும் கவர்வீங்க.

மிதுனம்

மனசைத் தூய்மையா வெச்சுக்கங்க.  தப்பான வழியில் போக நினைக்கவே வேண்டாம். குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்கலாம் என்று கையைப் பிடிச்சு இழுத்து அழைக்கும் நண்பர்களின் நட்பைப் பட்டாக்கத்தியை வெச்சு கட் செய்ங்க. மேடை ஏறிப் பேசிக் கைதட்டல் வாங்குவீங்க. கல்யாணம் காட் சின்னு சென்ட் போட்டுக்கிட்டுக் கிளம்புவீங்க.  நண்பர்களுடன் சினிமா டிராமா கச்சேரி எல்லாம் உண்டு. குடும்பத்தில் கட்டாயம் மேளம் கொட்டும். என்னதுங்க? உங்க மேரேஜா? எப்ப நடக்கும்னு கேட்கறீங்களா? இதோ கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரிஞ்சாச்சே. கொஞ்சமே கொஞ்சம் வெயிட் செய்ங்க. லிட்டில் பொறுமை போதும். சின்னச் சின்னதாய் எறும்புக்கடி மாதிரி ஆரோக்யம் கடிக்கும். கண்டுக்காதீங்க. தானே சரியாகிடும்.

கடகம்

நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்களைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க. கடந்த ஒன்றரை வருஷமா இருந்து வந்த குடும்பத் தகராறும் கணவன் மனைவி சண்டையும் ஒரு ஓய்வுக்கு வந்தாச்சுங்க. இன்னும் கேட்டால் உங்க மனசில் சமீபமாக இருந்த கோப தாபங்களும் வக்கிர எண்ணங்களும் டக்கென்று சுவிட்ச் போட்டது போல் காணாமல் போயிருக்குமே? கரெக்டா? அலுவலகத்தில் நல்லபெயர் எடுக்க ஆரம்பிப்பீங்க. முன்பு பதவி உயர்ந்து பொறுப்பு வந்தது. சம்பளம் கூட உசந்திருக்கும். ஆனால் பாராட்டுக்கு ஏங்கிய காதுகளுக்கு அது கிடைக்காமல் போயிருக்கலாம். இனி அந்தக் குறை தீர்ந்ததுங்க. சும்மாவா! கொஞ்ச நஞ்சமாகவா உழைச்சீங்க!

சிம்மம்

முன்பு நல்லவர்களின் பகையும் தீயவர்களின் நட்பும் உங்களைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தன. இரண்டும் தலைகீழாகப் போகுது.   சமீபத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த தடைகள் .. தாமதங்கள்… டென்ஷன்கள்.. குற்றச்சாட் டுகள்.. பழிகள் எல்லாமே தற்காலிகமாக, ஸ்பீட் பிரேக்கர் போட்டாற்போல் வேகம் குறையும்.மனசில் நல்ல சிந்தனைகள் விதைப்பீங்க. மகனோடு/ மகளோடு உலக யுத்தம் வேண்டாம். பிழைச்சுப் போகட்டும் விடுங்க. சத்தம் போடப்போட உங்களை அதிகம் சிரமப்படுத்துவாங்க. ஏங்க.. குழந்தைங் கன்னே இல்லை.. உற்றார், உறவினர், சக ஊழியர்கள் எல்லோரிடமுமே ஏன் இத்தனை கடுமையா நடந்துக்கறீங்க பேசறீங்க? வாக்கினில் கொஞ்சம சர்ககரை தடவுவது நலலது.

கன்னி

சற்றே தன்னம்பிக்கை குறைவது போல் இருந்தால் உங்களை நீங்களே முதுகில் தட்டி உற்சாகப்படுத்திக்குங்க. சகோதரர்களுடன் குருக்ஷேத்திர யுத்த மெல்லாம் வேண்டாமே. அவங்க அனுசரிக்கத் தயாராத்தான்ந இருக்காங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ஆமா…அதெப்பிடிங்க கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! கங்கிராஜூலேஷன்ஸ். ஆனால் ஒண்ணு நன்றாய் நினைவு வெச்சுக்குங்க.  எதிலுமே கையெழுத்துப் போடுவதற்கு முன் பேனாவை சரிபார்ப்பதைவிட உங்க தீர்மானத்தை சரிபாருங்க. நல்லவங்க மற்றும் விஷயம் தெரிஞ்சவங்களை ஆலோசனை கேளுங்க.  நீங்க உழைச்ச உழைப்புக்கேற்றபடி இந்தப் பக்கத்திலிலுந்து ஒரு லாபம் அந்தப் பக்கத்தி லிருந்து ஒரு லாபம் என்று வரும். அரசாங்கத்திடமிருந்தும் பைசா வரும்.

துலாம்

முன் ஒரு காலத்தில் செய்தீங்களே முயற்சி…அது இப்போ பலன் கொடுக்கும். கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும். உங்களை நீங்க நிரூபிச்சுக்கிட்டு வறீங்க. கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்சினைகளும் தொல்லைகளும் தீர்ந்து இப்பதான் அப்பாடான்னு மனசில் ஒரு நிம்மதி படர்ந்திருக்கும். அதை ரசிச்சுப் பருகுங்க. எத்தனைக்கெத்தனை உழைச்சீங்களோ அந்த அளவு நன்மை உண்டு. ஆனால் முன்பு சோம்பித் திரிஞ்சவங்க இப்ப பலனை எதிர் பார்க்காதீங்கப்பா. சாரி.  குழந்தைங்களால் பெரிய சந்தோஷம் கெடைக்கப் போகுது. அவங்களுக்கும் உங்களால  சந்தோஷம் கிடைக்கும். அவங்ககூட ஆர அமரக் கொஞ்ச நேரம் ( கொஞ்சவும் நேரம்) செலவு செய்வீங்க. ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச்.

விருச்சிகம்

யப்பாடி. ஆரோக்கம் எப்படியெல்லாம் உங்களை பயமுறுத்திக்கிட்டே இருந்துச்சு போதாக்குறைக்குக் கீழே விழுந்தோ வாகனத்தில்  வாரியோ கை காலை உடைச்சுக்கிட்டு எலும்பு முறைவோ.. அறுவை சிகிச்சையோ எதிர் கொண்டீங்க. அப்பா..டா. இடி இடிச்சு முடிஞ்சமாதிரி சந்தோஷ மழை  பொழி யும். எந்தப் புதிய வாய்ப்பு வந்தாலும்.. கையெழுத்துப் போடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் … நல்லவங்களோடு கலந்து நாலையும் யோசிங்க. ஜாலியான பொழுது போக்குக்காக வயலில் விதை நெல் தூவுவது போல் பணத்தை இறைக்க வேண்டாம். எதிர்காலத்துக்கு நிச்சயம் சேமிச்சுக்குங்க. அந்தப் பழக்கம் ஏன் உங்ககிட்ட இருக்கவே மாட்டேங்குது? பயணத்துக்கு ரெடியா? இல்லாட்டியும் யார் விட்டாங்க! கட்டுங்க மூட்டையை. கிளம்புங்க பாஸ் போர்ட்டையும் விசாவையும்  தயார் பண்ணிக்கிட்டு. ஆமாம். அதேதான். வெளிநாட்டுப் பயணம்தான்.

தனுசு

மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. அது போதும் நல்லா இருப்பீங்க. யாருக்கும் உங்களால் பிரச்சினை வராது. உங்களுக்கும் யாராலும் வராது.  எனினும் சோம்பல் என்ற சமாசாரத்தை மூட்டை கட்டிக்கடலில் போடுங்க. முடிந்தேவிட்டது என்று நீங்க கைவிட்ட மேட்டர்கள் திடீர்னு துளிர்விட்டுக் காற்றில் ஆடி வயிற்றில் பல லிட்டர் குளிர் பால் வார்க்கும்.  குறிப்பாய் அலுவலகம் பற்றி மனதில் அலையடித்துக் கொண்டிருந்த டென்ஷன்கள் டாட்டா பை பை சொல்லிட்டுக் கிளம்பிடும். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று சற்று அதிகமாய்த்தான் அல்லாட வேண்டியிருக்குங்க. புத்திசாலி என்று நிரூபிக்கும் செயல்கள் செய்வீங்க,  மெயில்பாக்ஸில் உங்களை மகிழ்ச்சியில் துள்ளச் செய்யும் செய்தி வரும்.

மகரம்

உங்க ஆரோக்யம் உங்க கையில்தான் இருக்கு.    எதையும் ஒரு கட்டுப்பாட்டில் வெச்சுக்குங்க குறிப்பாய்ப் பேச்சு சாப்பாடு இரண்டையும் சி சி டி வி காமரா போடாத குறையாக நீங்களே கண்காணியுங்க. உங்க வாழ்க்கைப் பிரச்சினை களை மத்தவங்க தீர்மானிப்பதற்கு மறந்தும் அனுமதிக்காதீங்க. எஸ்பெஷலி கணவன் மனைவி பிரச்சினையில் மூன்றாவது நபருக்கு ‘ நோ என்ட்ரி‘ குடுத்துடுங்க. நம் வாழ்க்கை வாகனத்தின் ஸ்டியரிங்கை அடுத்தவங்க பிடிச்சு ஓட்ட அனுமதிக்க முடியுமா என்ன? அலுவலக விஷயமாகவும் சொந்த விஷய மாகவும் ஏதாவது பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வென்றும் லாபம் அருளும். நன்மையாகவே முடியும்.

கும்பம்

மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க. எதற்கெடுத்தாலும் கோபப்படணும்னு வெச்சிருக்கீங்க பாருங்க.. அந்த  பாலிசியை மட்டும் மாத்திக்குங்கப்பா. ப்ளீஸ்.  நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங் களுக்கும் சரி நன்மையில்தான் முடியும்.  எதையும் நல்ல நோக்கத்துடனேயே செய்ங்க. கோயில் குளம்னு ஜாலியாய் சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட் டீங்க.  கவனமாய்ப் பயணம் செய்யுங்க. நல்லபடியா முடியும்.  பலகாலமாய் அமையாமல் இருந்து வந்த குலதெய்வ வழிபாடு தன்னிச்சையாய் அமைந்து விடும். மனசில் நிம்மதி பரவும்.  ஏராளமான லாபங்கள் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு வங்கி இருப்பாக உருமாறி உட்காரும்.  ஆனால் நிதானமாகத்தான் வரும்.

சந்திராஷ்டமம்:  21.02.2019 முதல் 23.02.2019 வரை

மீனம்

திடீர் உற்சாகம் மனசில் எழும். நிறையக் காரணங்களும் அதற்கு இருக்கும். பல காலம் பெண்டிங் வைத்திருந்த விஷயங்களைப் பரபரப்பாக முடிச்சு நிம்மதியடைவீங்க. கண்ட விஷயங்களுக்கெல்லாம் ஏங்க பயமயமாய் இருக்கீங்க? யாரோ யாரையோ ஏதோ சொன்னால்கூட அது உங்களுக்குத் தான்னு நினைச்சு ஏன் டென்ஷன் ஆவறீங்க? உங்களைச் சுற்றி ஏராளமான நல்லவங்க இருக்காங்க. உங்களை அவங்க மனசார நேசிக்கறாங்க. சந்தோ ஷப்பட்டுட்டுப் போவீங்களா! சற்று அல்லாட்டமும் செலவுகளும் இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்துடுவீங்க. கணவருக்குப் பதவியும் சம்பளமும் உயரு. உங்களுக்கும் வெளிநாட்டு ட்ரிப்பும் இருக்கு. அதிருஷ்டம் அத்தனை திசைகளி லிருந்தும் உங்களை நோக்கி ஓடி வரும். முன்பெல்லாம் நிறைய உழைச்சீங்க. கொஞ்சமாய் லாபம் வந்துது. இப்ப கொஞ்சமாய் உழைச்சு நிறையப் பலன் காணப் போறீங்க.

சந்திராஷ்டமம்:  23.02.2019 முதல் 25.02.2019 வரை