வார ராசிபலன்: 28-09-18 முதல் 04-10-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

பல நாட்கள் கழித்து நெருங்கிய உறவினர்களுடன் சந்தோஷமாகப்பொழுது கழியும். நிறையப் பயணங்கள்  உண்டு.  பல மணி நேர விமானப்பயணங்கள்.. ரயில்.. பஸ்.. கார்.. என்று வாட் நாட்! தலைமுறை தாண்டிய அன்பை அனுபவிப்பீங்க. நட்பு வட்டம் சின்ன சைஸிலிருந்து பெரிய சைஸூக்கு மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு! கவலையைத் தூக்கி மேஜைக்குக் கீழே உள்ள அந்த டஸ்ட் பின்னில் போடுங்க. அதிருஷ்டத்தையெல்லாம் இப்போ தைக்கு நம்பவே வேண்டாங்க. நேர்மையும் உழைப்பும் மட்டும்தான வின்னிங் போஸ்ட் தொடும்.

ரிஷபம்

வேலை பளு சற்று அதிகம் இருந்தாலும் மனசில் உற்சாகமும் சந்தோஷமும் இருப்பதால் எல்லாவற்றை யும் அநாயாசமாக ஊதித் தள்ளிடுவீங்க. மனதுக்குப் பிடிச்சவங்களின் ஆதரவு எப்பவும் உண்டு. குழந்தைகளால் கவுரவமும்  அதிகரிச்சுப்பெருமிதமும் இன்க்ரீஸ் ஆகும். மத்தவங்களுக்கு உழைக் கணும்னா ஓடிப்போய் முதல் ஆளா நிக்கறீங்க. நல்லதுதான். இப்படியே இருங்க. பட் ஒன் திங். அதற்கு அவங்க பதிலுக்கு எப்படி நடந்துக்கிட்டாலும் டென்ஷன் ஆகக்கூடாது. ஓகேயா? கூலா இருங்க. சுருங்கச் சொன்னால்கடமையைச் செய்ங்க. பலனை இறைவனிடம்/ கடவுளிடம்/ பகவானிடம் விடுங்க.  அப்பதாங்க மனம் நிம்மதியா இருக்கும். நான் சொல்வது சரிதானே?

மிதுனம்

உங்களுக்கென்ன? உறவுகளும் நட்புகளும் போட்டி போட்டுக்கிட்டு ஓடி வந்து ஆதரவு காட்டுவாங்க. மேலும் மேலும் வசதிகளும் நன்மைகளும் அதிகரிக்கும். கொஞ்சம் சாப்பாட்டு விஷயத்தில் கேர்ஃபுலா இருங்க. அதைவிட அதிக ஜாக்கிரதை  பேச்சில் வேணுங்க. ஆரோக்யத்தை எந்த வகையிலெல்லாம் காப்பாத்திக்கலாமே அப்படியெல்லாம் காப்பாத்திக்கப் பாருங்க. கல்வி நிலையத்திலும் அலுவலகத் திலும் புகழ் அதிகரிக்கும். படிப்போ, உத்யோகமோ எதுவானாலும் உழைச்சால் மட்டும்தாங்க பலன் கிடைக்கும். அதென்ன அப்படி ஒரு எக்ஸ்பிரஸ் வேகக் கோபம்? நோ.. அதைக் கவர் போட்டு மூடுங்க. யோசிச்சா ஒரு நெல் முனையளவுகூட உங்க மேல நியாயம் கெடையாது. பிறகென்னங்க.

கடகம்

கணவன் மனைவியாகட்டும் .. நண்பர்களாகட்டும்.. பெற்றோராகட்டும்.. ஒருத்தருக்கொருத்தர் உதவியாய் இருப்பீங்க. திடீர்னு வெளிநாட்டுக்க பேக் செய்ய வேண்டி வரலாம். சூட்கேஸ் ரெடியா?  பாஸ்போர்ட் ரெடி பண்ணுங்க. விசா தன்னால் கிடைக்கும். எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆவதை விட்டுட்டுக் கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு கிளைமேக்ஸ்ல பாருங்க வேடிக்கையை. சக்ஸஸ்தான். உங்கள் செல்வாக்கு  அதிகரிக்கும். நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி நன்மையில்தான் முடியும்.. கூடிய சீக்கிரம் அவங்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து நீங்களே மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து அதிசயப்படப் போறீங்களே…

சிம்மம்

வருமான உயர்வு கிட்டும்.  உடனே அதற்கேற்ற செலவுகளும் வரும்தான். இல்லைன்னு யார் சொன் னாங்க? அதுக்காகவெல்லாம்  டென்ஷன் ஆவாதீங்க. குழந்தைகளின் வாழ்வு வளம் பெறும். வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்கள் இல்லத்தில் உறவினர் வருகை உற்சாகம் தரும். மாமன் வழி சொந்தங் களுடன் உறவு பலமாகும். உங்களுக்கு ஓர் அருமையான உத்யோகத்தை வாங்கித்தர வாய்ப்புள்ளது! பணத்திற்கோ நிம்மதிக்கோ குடும்ப ஒற்றுமைக்கோ குறை இருக்காது. அம்மாவுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்குவீங்க. பள்ளிக்கூடம்.. கல்லூரி.. யூனிவர்சிட்டி.. என்று எங்கு படிப்பவராக இருந்தாலும் அதில் நீங்க வெற்றியைடைவீங்க. பாராட்டுக்கிடைக்கும். ஒருவேளை மேடையில் ஏற்றிக் கைதட்டினாலும் தட்டுவாங்க, குட் லக்  

கன்னி

வெளிநாட்டுப் பயணம் நிர்ணயமாகும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். சகோதர சகோதரிகளுக்கு லைஃபில் முன்னேற்றம் இருக்கும். இவ்ளோ உயரத்துக்குப் போயும் அவங்களால் உங்களுக்கு முன்னேற்றம் இல்லையேன்னு டென்ஷன் ஆக வேண்டாம். உரிய நேரத்தில் கண்டுப்பாங்க. உதவுவாங்க. குழந்தைகளுக்குக் கோபம் ஏற்படலாம். சரி சமமாக சண்டை பேத வேண்டாம். வேலை பார்க்கும் இடத்திலோ பள்ளியிலோ சம்பந்தமில்லாத சிறு பழிகள் ஏற்பட்டாலும் உங்களுடைய நல்லகாலம் காரணமாக அனைத்தும் விலகும். நண்பர்களையோ உறவினர்களையோ அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம். நம்பி மனசைத் திறந்து கொட்ட வேண்டாம். நாளைக்கு உங்க பெயரி டேமேஜ் செய்யமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

சந்திராஷ்டமம்: 27.09.2018 முதல் 29.09.2018 வரை

துலாம்

சின்னச் சின்ன ஏமாற்றங்களும் சிரமங்களும் இருந்தாலும் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் உண்டு. வெளியூர்ப்பயணங்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். அதற்கான செலவினங்கள் அதிகரிக்கும். எனினும் செலவுகள் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். குழந்தை களால் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதி மட்டுமின்றி மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். வங்கிக் கணக்கில் தொகை உயரும். மாணவர்களேற உங்களுக்கே உங்க  மார்க்கைப் பார்த்துக் கண்கள் விரியும்.  நீங்க மாணவர்களோ மற்றவர்களோ .. உங்க முதுகில் நீங்களே ஷொட்டு கொடுத்துப்பீங்க. கண்ணாடியைப் பார்த்துப் பாராட்டிப்பீங்க. குட் லக்.

சந்திராஷ்டமம்: 29.09.2018 முதல் 01.10.2018 வரை

விருச்சிகம்

அதிருஷ்டமும் உழைப்பும் ஒரு சேரக் கைகொடுக்கறதுன்னா சும்மாவா? வீட்டில் ஜாதகம் எடுத்திருந்தால் மடமடன்னு முடியும் … கவலைப்படாதீங்க…!  திருமணம் முடிந்தவலா. பாப்பா பிறக்கும்.  கோயில் குளம் என்று டாட்டா போகத் திட்டமிட்டிருந்தீங்க. நடக்கும். பொதுவாகவே எல்லாத் திட்டங்களும் எந்தவிதத் தடையும்  இல்லாமல் நிறைவேறும். கவலை வேண்டாம். நீங்கள் பயந்த அளவு எந்தப் பிரச்சினையும் வராது. டோன்ட் ஒர்ரி. உங்களுக்கும்  குடும்பத்தில் உள்ளவங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங். விட்டுக் கொடுத்துடுங்களேன்? தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. . கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. பயணம் போவீங்க. நிறையப் பயணம்! பெரிய பயணம்!

சந்திராஷ்டமம்: 01.10.2018 முதல் 03.10.2018 வரை

தனுசு

டாடிக்கு எல்லா நன்மைகளும் ராக்கெட் வேகத்துல ஓடுமே. இதபாருங்க.. இந்த சோம்பல் சோம்பல்னு ஒரு விஷயம் இருக்கு பாருங்க அதைத் தூக்கி ரீசைக்ளிங்க தொட்டியில் போட்டு அதையும் முழுக்க காலி பண்ணிடுங்க. திரைத் துறைல இருக்கீங்களா? குட் குட். உங்களுக்கு முன்னேற்றமான காலம்தான் இது. புதுப்புது அக்ரீமென்ட் எல்லாம் போட்டுக் கையெழுத்துப் போடச் சொல்லுவாங்க. போடுங்க. இதன் ரிசல்ட் நல்லபடியாத்தான் இருக்கும். ஏகப்பட்ட சாதனைங்க நிகழ்த்த இந்த ஒப்பந்தம் உதவும். உங்களுக்கென்ன தன்னம்பிக்கைக்குக் குறைவா  என்ன?

சந்திராஷ்டமம்: 03.10.2018 முதல் 05.10.2018 வரை

மகரம்

சற்று அழகாகத் திட்டமிட்டு ஒழுங்காய் நிறைவேற்றினால் ஜெயிச்சு நிமிர்வீங்க. மாணவ மாணவிகள் போன வருஷம் மாதிரிக் காலாட்டிக்கிட்டு மார்க்கை லாரியில் அள்ள முடியாது. வீட்டில் கல்யாணம் போன்ற நல்ல விஷயங்கள் தீர்மானிக்கப்படும். சில நல்ல விஷயங்களையும் சுப காரியங்களையும் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் சற்றுக் கால தாமதமாகலாம். இருந்தாலும் கடைசியில் அது நல்லபடியாவே முடியும். எதுக்குங்க பயமும் கவலையும்? கலைத்துறையில் உள்ளவங்களுக்கும் சினிமாத் துறையில் உள்ளவங்களுக்கும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். புகழின் படிகளில் மெல்ல மெல்ல ஏ2றக்கிட்டே போவீங்க.

கும்பம்

பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். பல வருடங்களாய் எவ்வளவு திட்டமிட்டாலும் போக முடியாத ஊர்களுக்கும், கோயில்களுக்கும், உறவினர் களின் வீடுகளுக்கும் இனி உடனுக்குடன் போவீங்க. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வெளிநாட்டு உத்யோகம் கிடைக்கும்!  சற்றுத் தடைகளும் தாமதங்களும் ஏற்படக்கூடும். எனினும் செல்வ நிலை உயரும். குழந்தைகளால் ஏற்பட்டுக்கொண்டிருந்த டென்ஷன்கள் குறையும். பயம் வேண்டாங்க. அவங்க இன்னும் முன்னேறுவாங்க. உங்க வயிற்றில் ஐஸ்க்ரீம் வார்ப்பார்கள். வெளிநாட்டிலிருந்து  நெருங்கிய உறவினர்கள் வருவார்கள். அவர்களால் நன்மைகளும் விளையும்.

மீனம்

பயணங்கள் இனிதாய் அமையும். நெருங்கிய உறவினர்களைச் சந்திப்பீங்க. பொறுப்பும் வேலைப்பளு வும் அதிகமாகும். எனினும் சந்தோஷமும் திருப்தியும்  இரட்டிப்பாகும். பொழுது போக்கு அம்சங்களில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியும். மாணவர்களுக்கும் திருமணம் குழந்தைப் பேறு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கும்  இனிப்பான செய்தி காத்திருக்கிறது. அப்பாவுக்கு இத்தனை காலம் தவறிப் போய்கொண்டும் தப்பிப்போய்க்கொண்டும் இருந்த நன்மைங்களெல்லாம் படிப்படியாய் மீளும். திடீர் அதிருஷ்டம் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாமல்  இருந்த உங்களுக்கு இப்போது அதிருஷ்டம் வெளுத்து வாங்கும். என்ஜாய் என்ஜாய்.

You may have missed