ஐக்கிய ஜனதா தள தலைவர் காரை தாக்கிய பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள்

பாட்னா

பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பிரசாந்த் கிஷோரின் காரை தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

வரும் 5 ஆம் தேதி அன்று பாட்னா பல்கலைக்கழக மாண்வர் சங்கத் தேர்தல் நடைபெற உளது. இந்த மாணவர் சங்க தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அந்த பிரசாரம் முடிவடைந்த சிறிது நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் கிஷோர் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துள்ளார்.

அவர் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள துணைவேந்தர் ராஸ்பிகாரி சிங் இல்லத்துக்கு சென்றுள்ளார். மாணவர் சங்கத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

அதை ஒட்டி அவர்கள் பிரசாந்த் கிஷோர் அங்கு வந்த காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மாமா ஒரு பேரிடர் மேலாண்மைப் பணி செய்து வருவதாகவும் அதற்காக அங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அவருடைய பதிலை நம்பவில்லை.

அங்கு கூடியிருந்த மாணவர்களில் சிலர் பிரசாந்த் கிஷோரின் காரை தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி உள்ளன. இதை ஒட்டி காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்துள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக ஒரு சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.