வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்தசில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டல சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கடந்தசில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்புப் பணிக்காக சென்னைக்குச் சென்று திரும்பினர். 2 பேருக்கும் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சுகாதார அலுவலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று சுகாதார ஆய்வாளரின் சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வேலூர் சாமிநாதபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி, கஸ்பா, அரியூரை சேர்ந்த 2 குழந்தைகள், கொசப்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் என மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் வீடுகள் மற்றும் சிறப்பு வார்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக வேலூர் நகரில் சைதாப்பேட்டை, சேண்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரும்பு தகடுகள் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. வேலூர் வள்ளலார் டபுள் ரோட்டில் நேற்று மாலை தடுப்பு நடவடிக்கையாக இரும்பு தகடுகள் வைத்து, அந்தச் சாலை மூடப்பட்டது.

அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு அதன் முடிவுகள் வந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 590 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 40 பேருடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 636 பேராக உயர்ந்தது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது.