சென்னை: அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பத்திரிகை டாட் காம் இணையஇதழ் ஆரம்பம் முதலே கூறி வருகிறது.

அதுக்கு இவர் சரிபடமாட்டார் என்ற தலைப்பிலேயே ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு கட்டுரைகளை உங்கள் பத்திரிகை டாட் காம் இணையதளம் வெளியிட்டிருந்தது.
அதை மெய்ப்பிக்கும் வகையில், ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு காரணமாக, நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.
இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள் என்று கூறியுள்ளார்.

அதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை….
[youtube-feed feed=1]