வார ராசிபலன்: 26.04.2019 முதல் 2.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

 மிகச் சிறப்பான நிதி நிலையை அமையும். அதிகப் பணம் சம்பாதிப்பீர்கள். இது உங்களைப் பொறுத்தவரை செழிப்பான வாரம். பணம் புரளும். எனினும்.. அதென்னங்க உங்களுக்கு திடீர்னு இப்பல்லாம்  அவ்ளோ அகல வாயச்சவடால்? நீங்க ஹலேவோட நிறுத்தப்போற தில்லை. கண்டபடி பேசத் தோன்றும். வேண்டாமே. ப்ளீஸ். அப்புறம் அவங்க வருத்தப்படு வாங்களோ இல்லையோ…கட்டாயமாய் நீங்க ஃபீல் பண்ணுவீங்க. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். உத்யோகத்தில் சாதகமான காலம். அன்பு மற்றும் அக்கறை காரணமாக கணவருடன்/ மனைவியுடன் அனுசரித்துப் போவீர்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சேமித்தால் உடனே உதவும்.

ரிஷபம்

சிஸ்டர்ஸ் மற்றும் சகோதரர்கள் அனுசரணையா இருப்பாங்க..  முயற்சிகள்  ஒவ்வென்றும் லாபம் அருளும். படிப்பில் கவனம் கூடும். மதிப்பெண்ணும்தான் அதிகரிக்கும். பெண்களைப் பொருத்த வரையில் கணவர் வீட்டாரிடம் நல்ல பெயர் எடுப்பீங்க.எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க.போனவை எல்லாம் வரும். திருமணத் தடை உடனடியாய் நீங்கும். அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. உடனே வேண்டாத விஷயங் களில் நிறைய கவனம் செலுத்தறீங்களே….மம்மி பற்றி அதிகப்படி கவனம் செலுத்துங்க. பண விஷயத்தில் சிறிது சிக்கல் ஏற்படலாம். அதைச் சமாளிக்க கடன் வாங்காமல் இருப்பது நலம்.  விரைவில் பணத்தை ஏற்பாடு செய்துவிடுவீர்கள் 

மிதுனம்

போற்றுவார் போற்றட்டும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் தூற்றட்டும். நீங்கள் மட்டும் வாயைத்திறந்து எதுவும் பேசிவிடாதீர்கள். காரணம் உங்களுக்கு விடிகிறபோது விளங்கும்.  பிரச்சினைகள் எல்லாம் தற்காலிகம்தான். எனவே பொறுமையுடன் உறுமீன் வருமளவும் காத்திருங்க. பணம் சம்பாதிக்க தவறான வழியை தேர்ந்தெடுக்க கூடாது. அதனால் நீங்கள் பிரச்சினையில் மாட்டக்கூடும். காதல் விவகாரம் மகிழ்ச்சிகரமாகச் செல்லும். கோபம் மற்றும் சண்டைகள் அறவே கூடாது. சொந்த வாழ்க்கையில் சிறப்பான அனுகூலம் உண்டு.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை

கடகம்

சின்ன சின்ன மீன்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துத் திமிங்கலம்னு பயப்பட வேண்டாங்க. சூழ்நிலை காரணமாய் கற்பனை பயங்கள் வருவது இயல்புதான். ஆனால் அதைத் தவிர்ப்பது நல்லது. சில விஷயங்களில் குறிப்பாய் சுப காரியங்களில் சிறு தாமதங்கள் இருந்தாலும் எல்லாம் நல்லா முடியும். ஆரோக்யமே சிறந்த செல்வம்னு ஒரு ஆங்கிலப்பழமொழி இருக்கு, அதை மனசுக்குள் ஃப்ரேம் பண்ணி மாட்டிக்குங்க. மம்மியை நல்லா கவனிச்சுக்குங்க. படிப்பில் முழு வீச்சில் கவனம் செலுத்துங்க. உறவினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். தந்தை வழி உறவினரிடம் பகை தீரும். பொருளாதர நிலையில் கவனம் தேவை. ஒருவர் மேல் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையால் நஷ்டம் ஏற்படாமல் பார்த்தக்கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 28 முதல் மே மாதம் 1ம் தேதி வரை

சிம்மம்

இன்று நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதெல்லாம் பூமராங் மாதிரி உங்களுக்கே வரும். நல்ல விஷயங்கள் பொல்லாத விஷயங்கள் மற்றும் வார்த்தைகள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். நண்பர்கள் / நண்பிகள் உதவி உங்களுக்கும் கிடைக்கும். உங்கள் உதவி அவங்களுக்கும் உண்டு. குழந்தைகளால்  சமீபத்தில் இருந்துக்கிட்டிருந்த  டென்ஷன்ஸ்  போயே போச். இன்ஃபேக்ட் எந்த பிரச்சினையுமே உடனுக்குடன் சரியாயிடும். அலுவலக விஷயத்தில் மிகக் கவனமாகச் செயல்படுங்கள். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். உங்களுக்கு உள்ளுக்குள்ளே உதைப்பு இருந்தாலும் உழைப்பும் இருக்கறதால அலுவலகத்தில் புகழ் மற்றும் பாராட்டுக் குவியும். அவார்டு/ ரிவார்ட் கிடைக்கும்

சந்திராஷ்டமம் : மே மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 3 ம் தேதி வரை

கன்னி

ஏகப்பட்ட அட்ராக்ஷன் கூடும். உங்க செல்வாக்கு உயரஉயரப் போகும். சகோதர சகோதரி களுக்கு குட் நியூஸ் உண்டு. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்ன தற்கேற்ப அனைவரையும் பேச்சிலேயே கவர்ந்து மகிழ வைப்பீங்க. அலுவலகத்தில் மண்டையை பிச்சுக்கும்படியா சம்பவங்கள் நடந்தாலும் பொறுமையா சரி செய்வீங்க. சிலர் வேற்று மதத்தை சேர்ந்தவர் மேல் காதல் கொள்வீர்கள். எதையும் யோசித்து முடிவெடுங்கள். தீய பழக்கங்களில் உடல் நலம் பாதிக்காமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் உள்ள உறவினர்களால் லாபமும் நன்மையும் கிடைக்கும்.  கன்னாபின்னான்னு சாப்பிடாதீங்க. அப்புறம் அவஸ்த்தைப் படாதீங்க.

துலாம்

எப்போதும் தூய பழக்கங்களில் ஈடுபடுங்கள். ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கத்தையும் வெட்டென மறங்க. பார்வை டெஸ்ட் செய்துக்குங்க. நண்பர்கள் மற்றும் சிநேதிங்க கிட்ட கோப தாபங்கள் வேண்டாம், ப்ளீஸ். பிறகு ஸாரி சொன்னாலும் ஒட்டாது. தேவையா? குழந்தைகள் வாழ்வில் மிகவும் எதிர்பாராத நன்மை மிகவும் சட்டென்று நிகழும். வீடு வாங்குவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். எதிர்பார்புகளை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்றவர்களுடன் தேவையில்லாத பேச்சுக்களைப் பேச வேண்டாம். அறிமுகமில்லாதவர்களுடன் இணைந்து தொழில் எதுவும் துவங்க வேண்டாம்.

விருச்சிகம்

குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் துணையின் மேல் நம்பிக்கை அதிகரிப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகள் மூலமும் மகிழ்ச்சி உண்டு. வழிபாட்டத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமணம் தள்ளிப்போய் டிலே ஆனால் கவலையே படாதீங்க. எல்லாம் நன்மைக்கே என்பதை மட்டும் மைண்ட்ல உறுதியா ஆணியடிச்சு மாட்டிடுங்க. வாழ்க்கைத் துணைவர் வெளியூர் வெளிநாடு போவாங்க.  குடும்பத்தைப் பிரிஞ்சு அலுவலக ரீதியாய்ப் வெளியூர்ப்பயணம் போக வேண்டி வரும்.  அந்தப் பிரிவுக்கு உங்களுக்குப் பரிசா அவருக்கு  உத்யோகமும் சம்பளமும் பாராட்டும் அவார்டும் ரிவார்டும் கிடைக்குமே.

தனுசு

திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு ஆசை நிறைவேறும்.  தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டு. பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாழ்வின் எந்த முடிவை யும்  தகுந்தவர்களைக் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் உயர்வு தாழ்வை சந்திக்க கூடும். குழந்தைகளின் நடவடிக்கை கவலையை ஏற்படுத்தலாம். ஆனால் அவை தாற்காலிகமானவைதான். மகிழ்ச்சிச் சுற்றுலா போக வாய்ப்புள்ளது. பணத்தைச் சிக்கனமாக செலவழியுங்கள். முதலீடுகள் செய்யத் தொடங்கலாம். காதல் வாழ்வில் மகிழ்ச்சியான திருப்பு முனை உண்டு.

மகரம்

சோம்பலை குறைத்து சுறுசுறுப்புடன் செயல்படவும். கேளிக்கை மற்றும் உற்சாகத்தில் கவனம் செலுத்தாதீர்கள். படிப்பிலும் உத்யோகத்திலும் அதிகக் கவனம் தேவை. திடீரென்று பெரிய தொகை கிடைக்கும். கணவருக்கு/ மனைவிக்கு வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங் கள் இருக்கும். அதில் உங்க பங்கும் இருக்கும். எந்த சிநேகிதரையும் சிநேகிதியையும் பகைச்சுக்க வேண்டாம். எந்த பகைவர்கிட்டயும் வம்புக்குப் போக வேண்டாம். இன் ஷார்ட் நண்பர்களிமும் பகைவர்களிடமும் சர்வஜாக்கிரதையா இருங்க.அலுவலகத்தில்   பொறுமை யும் பொறுப்புமாய்ப் பணியாற்றி அவங்க கிட்டேயிருந்து உங்களுக்குப் பாராட்டும் கிடைக்கும். ஓகே தானே? சந்தோஷமா?

கும்பம்

வெளிநாடு சென்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீண் சந்தேகங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.  உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் நல்ல முறையில் அனுசரிப்பீர்கள். நல்லாத்தான் பேசிக்கிட்டிருப்பீங்க.. எனினும் நடுநடுவில் சுள்ளுன்னு ஒரு வார்த்தை வருது பாருங்க. அதை மட்டும் அவாய்ட் செய்துடுங்க, ப்ளீஸ்.. தந்தை வழி உறவினர்களால் நன்மையை எதிர்பார்க்கலாம். சிறப்பாக உழைத்து முன்னேறுவீர்கள்.  மனைவிக்கு முழு ஆரோக்யம் மீளும்.  மகனையோ மகளையோ வெளிநாட்டில் படிக்க வைக்கக் கொஞ்சம் செலவு செய்ய வேண்டி வரலாம். டோன்ட் ஒர்ரி. பல மடங்காகித் திரும்பி வரும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மனைவி/ கணவருடன்  நல்ல முறையில் அனுசரித்துப் போவீர்கள். வீண் கற்பனை பயங்கள் வேண்டாம். பெண்கள் பிறந்தவீட்டு விசேஷங்களில் மகிழ்ச்சியடைவீர்கள். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று விருந்துண்டு மகிழ்வீர்கள். பொறாமை புழுக்கம் எக்ஸட்ராவையெல்லாம் மூட்டை கட்டித் தூக்கிப்போடுங்க. எக்கச்சக்க  கோயில்ஸ் விசிட்டா? நல்லது. நல்லது. புது வேலை கிடைக்கும். பேங்க் அல்லது அரசாங்க வேலை கிடைக்க அதிக வாய்ப்புண்டு.  நீங்களே பணிக்காக வெளியூர் வெளி நாடுன்னு போக வேண்டியிருக்கலாம். சந்தோஷமாய்க் கிளம்புங்க. லாபம்தான்.