வார ராசிபலன்: 01.03.2019 முதல் 07.03.2019 வரை! வேதா கோபாலன் 

மேஷம்       

சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க. முக்கியமாக் கோபப்பட்டுப் பல்லை நெறிச்சு முகத்தை கோரமாக்கிக்காதீங்க. எல்லாம் இதே சரியாகிவிடும். கொஞ்சம் பொறுத்துக்குங்க. உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் கிடைக்காமல் ஒரு பக்கம் இருக்க,  இன்னொரு புறம் நீங்கள் முயற்சியே செய்யாத ஒரு விஷயத்திற்கு திடீர் நன்மையை அள்ளி கஜானாவில் போடுவீங்க. டச் விட்டுப்போயிருந்த திறமைகள் திடீ ரென்று  பல காலம் கழித்துத் தலையைக் காட்டும். அதற்கேற்ற பாராட்டும், பரிசு, சன்மான மும் கிடைக்கும். குழந்தைகள் உங்களைத் தாங்கு தாங்கென்று தாங்குவதால் மனசு மகிழ்ச்சியில் நிரம்பி  வழியும். பயணங்கள் இதோ வருகின்றன. ரெடியாயிக்குங்க.  பெட்டியில் ஜிப்பெல்லாம் சரியா இருக்கா? உடைகளை இஸ்திரி போட்டு வெச்சுட்டீங் களா…. கம்பளி உடைகள் உட்பட.. ஒரு வேளை வெளிநாட்டுப்பயணமா இருந்தாலும் இருக்குமேங்க.

ரிஷபம்

பேச்சில் ஏற்பட்டுள்ள புத்திசாலித்தனம் உங்களை உயரத்தில் தூக்கி உட்கார வைக்கும். குறிப்பாக மேடைப் பேச்சாளர்களுக்கு இது அறுவடை  நேரம்தான்.  உத்யோகமோ.. பிசி னஸோ… பொழுது போக்கோ… எதுவானாலும் உடம்பை வருத்திக்கிட்டுப் பிறகு மருந்து சாப்பிடும் நிலை வராதிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு அதன்படியே நடங்க. குறிப்பாக சாப்பாடு மற்றும் தூக்கம் கெடாதிருக்க என்ன செய்ய ணும்னு பார்த்துக்குங்க. கவனம் ப்ளீஸ். உங்களுக்கு விருப்பமான வழிபாட்டுத் தலத்திற்குப் போகப்போறீங்க. நீங்க மட்டும் இல்லீங்க. குடும்பத்தோடு போவீங்க.  மற்றவர்கள் வயிறு வாழ்த்தும்படியாக உணவு விநியோகம்.. மற்றும் தானங்கள் செய்து புண்ணியம் மட்டுமின்றி மற்றவர்களின் வாழ்த்தையும் சம்பாதிச்சுக்குவீங்க.

சந்திராஷ்டமம் : 28.02.2019 முதல் 02.03.2019 வரை

மிதுனம்

குழந்தைகளின் புகழ் வண்ணமயமாக வெளிப்படும். மருத்துவம் சம்பந்தமான எந்தப் படிப்புப் படித்தாலும் நீங்க வெற்றியை நோக்கி மகிழ்ச்சி விமானத்தில் பறக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். டாடிக்கு உங்களால் நன்மை. உங்களுக்கு மம்மியால் நன்மை. வெட்டி அதிருஷ்டங்களை நம்புபவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் இருக்கும். புதிய வாகனங்கள் கிடைக்கும். சுய முயற்சியால் பெரிய வெற்றிகள் உண்டு. மனசில் மட்டுமல்லாமல் உடம்பி லும் ஒரு மந்த நிலையும், சோம்பலும், மனசில்  தேவையற்ற சோர்வும் கள்ள எண்ணங்களும் புதுக்கு  புறப்படக் காத்திருக்கும். கபர்தார். இடம் கொடுக்கவே செய்யாதீர்கள். அவற்றைவிட நீங்க மனசிலும் உடலிலும் பலசாலின்னு நிரூபிச்சுடுங்க.   

சந்திராஷ்டமம் : 02.03.2019 முதல் 04.03.2019 வரை

கடகம்

உங்க சமயோசிதம் உங்க பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் ”ஹேய்…கிரேட் யார்” என்று மற்றவர்களை விழிவிரியச் செய்யும். பகவத் கீதையை அர்த்தம் உணர்ந்து படியுங்க. புரியலையா? சின்ன வெற்றிகளுக்காக கட் அவுட் வைத்துக் கொள்ள வேண்டாம். (அதிலும் சொந்த செலவில்!)  அதே சமயம் சின்னச்சின்ன ஏமாற்றங்களுக்கெல்லாம் தலையில் கை வெச்சுக்கிட்டு சோர்ந்து போய் உட்காரவும் வேண்டாம். ரொம்ப நாள் கழித்துப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்குப் போய் ரிலாக்ஸ் செய்துப்பீங்க. வங்கினக் கணக்கு திருப்தி தரும்.  ஆனாலும் உங்களுக்கு மனசில் திருப்தி ஏற்படாது. நம்ம டைப்பே அதுதானே! அலைச்சலும் பயணங்களும் கணக்கு வழக்கில்லாம நிறைய உண்டுங்க.

சந்திராஷ்டமம் : 04.03.2019 முதல் 07.03.2019 வரை

சிம்மம்

எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்து செக் வரும்.  ஹப்பாடா. அதுக்காக எம்புட்டு நாள் காத்திருந்தீங்க. நெருங்கிய வட்டாரத்தில் திருமணக் கோலாகலம் வந்து விட்டது. அதற்கும்தான் காத்திருந்தீங்க. அம்மாவின் வாழ்விலும் மனசிலும் வெகுநாட்களுக் குப் பிறகு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுங்க. அதுவும் உங்களால் ஏற்படும் என்னும்போது மனசு நிறைகிறதா? குட் லக். குழந்தைங்க அவங்களா பண்ற டென்ஷன் போதாதுன்னு அவங்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பார்த்து உங்களுக்கு ஏற்படும் டென்ஷன்  இருக்கே… அது தேவையில்லாததுங்க. பிகாஸ்… கட்டாயமாய்க் குறுகிய காலத்தில் முடிவுக்கு வரப்போற டென்ஷன் அது. இந்த விஷயம் உங்களுக்கேயும் தெரியும். பிறகென்ன?

கன்னி

ஜாலிப் பயணம் முதல் ஜாப் பயணம் வரை எல்லாவற்றிலும் வெற்றிதான். அலைச்சலையும் களைப்பையும் மீறிய சந்தோஷம் ஒண்ணு இருக்கும். அதுக்கு ஈடு இணை ஏது? ஏராளமான பாராட்டுகள் கேட்டு கேட்டு உங்களுக்கே போரடிக்கும்!  நீங்கள்தான் வி ஐ பி என்று சுற்றி யிருப்பவர்கள் கொண்டாடுவார்கள். நீங்களும் அதற்குப் பொருத்தமாய்த்தான் நடந்துப்பீங்க. தலையில் கனம் ஏற விட்டுவிடாதீங்க. சொல்லிட்டேன். முன்பை விட இப்போ அதிக ஓய்வு கிடைக்கும். அதாவது உழைப்புக் குறையும். ஆனால் முன்பைவிட இப்போ வருமானம் அதிகரிக்கும். அம்மா கிட்ட தேவையில்லாம சண்டை போட்டு அவங்களோட மூட் கெட்டுப்போகக் காரணமா இருக்காதீங்க. வானங்களை மிகவும் நல்ல நிலையில் மெயின்டெயின் செய்யுங்க.

துலாம்

சின்ன ஏமாற்றங்களுக்குப் பொடியாய் உதிர வேண்டாம்.  இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படிக் கன்னத்தில் கையை வெச்சுக்கிட்டு உம்முன்னு உட்கார்ந்திருக்கீங்க? டாடி பற்றி பயம் வேண்டாம். அவர் உங்களை அன்புடன் நடத்துவார். அவருக்கு வந்த பிரச்சினைகளும் மிகவும் தற்காலிகமானவைதான்.  உத்யோகம் என்ற கோணத்தில் பார்த்தால் உங்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் வரப்போகின்றன. உறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்கு போல் கவனமாகக் கொத்தும் உங்களின் இந்தத் திறமையால் பிழைச்சுக்குவீங்க. மேலதிகாரிங்க உங்க திறமையைக் கவனிக்கலைன்னு ரொம்ப காலமாய் டென்ஷனாயிருந்தீங்க. இப்ப சந்தோஷமா? குடும்பத்தில் சந்தோஷ செய்தியும் சுப நிகழ்ச்சியும் உண்டு. பேச்சினால் (வாக்கினால்) நன்மை கட்டாயம் உண்டு.

விருச்சிகம்

கலைத் துறையில் இருக்கறவங்களுக்கு அமோக வெற்றி. நண்பர்கள் பாஸ்போர்ட் விசா ரேஞ்சில் பெரிய அளவில் உதவுவாங்க. அது ஆயுளுக்கும் மறக்காததாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபகாரியங்கள் உண்டு. பல காலம் கழித்துப் பழைய நண்பர்களை சந்திப்பீங்க. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சின்னச்சின்ன பிரச்சினைகள் எல்லாம் மெல்லச்  சரியாகும். முன்பெல்லாம் அலட்சியம் காட்டிய நீங்க இப்போ கோயி லுக்கெல்லாம் போறீங்க. நடக்கட்டும்! திடீர்னு பொறுப்பு வந்து மம்டி டாடிக்கு உதவி யெல்லாம் செய்யறீங்க. தொடரட்டும்! வெடுக் வெடுக்குன்னு பீச் மாங்காயில் மிளகாய் தூவினது போல் பேசறீங்களே…அதை மட்டும் கொஞ்சம் ட்ராஷுக்கு அனுப்பிடுங்க. அதிலும் மனசுக்கு உகந்தவங்ககிட்டயும் அப்படியே பேசினால் எப்படி?

தனுசு

ஆரோக்யப் பிரச்சினைகள் சுவிட்ச் போட்டதுபோல் காணாமல் போய் முட்டியை உயர்த்தி சிக்ஸ் பேக் காட்டுவீங்க. குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். கர்ணன் நீங்கதான்னு ஊர் மெச்சும். விட்டால் கவச குண்டலத்தையெல்லாம் தூக்கிக் கொடுத்துடு வீங்க.  வேணாம். அடக்கி வாசிங்க. இன்னொரு புறம் திரையரங்கம் அது இதுன்னு ஜாலியாய்ப் பொழுது போகும். எதையுமே அளவுக்கு அதிகமாய்ச் செய்ய வேண்டாங்க. ஒரு மெத்தனப் போக்கு இருக்கும். எதை எடுத்தாலும் அது உடனடியாக முடியாமல் பத்து முறை படையெடுத்த பிறகே முடிகிறமாதிரி தோன்றும். சற்று மனசை ரெடி பண்ணிக்குங்க.. முடிகிறபோது முடியட்டும்னு.  எனில் பிரச்சனை இருக்காது. ஆனால் ஒன்று நிச்சயம். பாப சிந்தனைகள் மட்டும் மனசில் புகாமல் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்  என்று உறுதியா இருங்க.

மகரம்

காதல் என்னும் வலையில் மாட்டாத திமிங்கலமாய் இத்தனை காலம் இருந்தீங்க. இனி… அதையும் பார்ப்போமே! பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டீர்கள். கஷ்டங்களைக் கடந்துவிட்டீர்கள். இனிமேல் அப்படி இருக்க முடியுமா தெரியலைங்க. ஒவ்வொரு அடியையும் கவனமாய் எடுத்து வைச்சா பிரச்சினைகள்ல மாட்டாம தப்பலாம். குறிப்பா வீண் பழி வராமல் பார்த்துக்குங்க. அதாவது நீங்களே முனைந்து முடிக்க வேண்டிய விஷயங்களை மற்றவர்களை நம்பி விடாதீங்க. அதே போல மற்றவர்களின் பொறுப்பை யெல்லாம் ‘நான் செய்யறேன். டோன்ட் ஒர்ரி’ என்றெல்லாம் வீர வசனம் பேசி ஏற்றுக் கொள்ள வேண்டாம். வேண்டாம். வேண்டவே…. வேண்டாம்.  நீங்க உண்டு.. உங்க வேலை உண்டு என்று போய்க்கொண்டே இருங்க.

கும்பம்

டாட்டா. பை..பை. விமானம் ஏறப்போறீங்க! சென்று வென்று வாருங்கள். ஆனால் அப்படிப் போகும்போது ஒரு விஷயம் நல்லா நியாபகம் வெச்சுக்குங்க.  பொருட்களை.. பையை.. பர்ஸை… பாஸ்போர்ட்டை.. செயினை.. மோதிரத்தை .. சுருங்கச் சொன்னால் எல்லா உடைமைகளையுமே ஜாக்கிரதையா.. நல்லாப் பார்த்துக்குங்க. மாணவர்கள் அரியலர்ஸை முடிப்பீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு அரியர்ஸ் பணம் வரும். ஆன்மிக ஈடுபாடு கொண்டவங்களுக்குத்  தொலை தூரப்பயணம் உண்டு. அப்பாடா…ஒரு வழியாய் செலவு களைக் குறைச்சுட்டீங்க. அலுவலகத்தில் உங்களைக் கடித்துக் கொண்டிந்த எறும்புகள் காணாமல் போயிருக்கும்.  அதாவது மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்கள் என்ற எறும்புகள்.

மீனம்

குழந்தைகள் பற்றிய டென்ஷனைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாதீங்க. டென்ஷனெல்லாம் ஓடும் மேகங்கள்தான். அலுவலகத்திலும்கூடத்தானுங்க…  எத்தனைக்கெத்தனை டென்ஷன் கள் உண்டோ  அத்தனைக்கத்தனை சந்தோஷமும்!  இத்தனைகாலமாய்க் கடனே என்று உழைச்சீங்க. இப்ப சந்தோஷமாய் ஈடுபாட்டோடு உழைக்கறதால  அது தரமான உழைப்பா இருக்குமுங்க. ஏழைகளுக்கும் முதியோருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய  ஆரம்பிப்பீங்க. மற்றவர்கள் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும். உங்களுக்கேயும் அதில் சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் உண்டாகும். உணவு உடை மற்றும் படிப்புக்கான உதவி யும்கூடச் செய்வீங்க. பலரின் மன நிறைவும் ஆசியும் அதில் கிடைப்பதால் “இதை ஏன் இனிமேல் அடிக்கடி செய்யக்கூடாது?” என்று தோன்ற ஆரம்பிக்கும்.  

 

கார்ட்டூன் கேலரி