வார ராசிபலன்: 03.01.2020 முதல் 09.01.2020 வரை!  வேதா கோபாலன்

மேஷம்  

கல்யாணம், கிரக பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டுவதால் சந்தோஷமோ சந்தோஷம் போங்க. உங்க பணப்பெட்டி நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்தக் காரங்க எல்லாரும் தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு நிறையவே இருக்குங்க.  காஸ்ட்லி ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. ரொம்ப நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் முடியும். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய டெஸிஷன் கள் எடுப்பீங்க. எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவாங்க. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிச்சு நல்லதொரு முடிவுக்கு வருவீங்க. உடன் பிறந்தவங்க பாசமழை பொழிவாங்க. மனைவி /கணவர் வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை தீர்ந்தாச்சுங்க.

2020 இனிதாகுக. குட்லக்.

ரிஷபம்

சிக்கனமாக செலவழித்து சேமிக்க ஆரம்பிச்சுட்டீங்க. குட் குட். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டா டென்ஷன் ஆகாதீங்க, நல்லபடியா ஆகிவிடுவார்.  அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படாம சிம்ப்பிளா விடுங்க. பாட்டன் வழி சொத்தைப் பெறுவதில் இவ்ளோ காலம் இருந்து வந்த  தடைகள் விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை ஏற்படும். ஆனால் அது குறுகிய காலத்தில் விலகிவிடும். மனசில் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். நல்லதாய்ச் சில முடிவுகள் எடுப்பீங்க. தம்பி தங்கை வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இத்தனை நாள் வராதவங்க வந்து போவாங்க. பல காலம் நிலுவையில் இருந்துக்கிட்டிருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் தீருமுங்க.

2020 இனிதாகுக. குட்லக்.

மிதுனம்

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டுங்க. நீங்க அரசியலில் இருந்தால் உங்கள் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வதற்கேற்ப நண்பர்கள் உறவினர்களைச் சந்தித்துச் சந்தோஷப்படுவீங்க. மறைமுக எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அதை நீங்க ஊதித்தள்ளிடுவீங்க. அலைச்சல் அதிகரிக்கும். யாரிடமும் எது பற்றயும் பேச்சில் கடுமை காட்டாதீங்க. ப்ளீஸ். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எனவே பேச்சில் கவனமாய் இருங்க. சில சமயம் பேசாமலேயே புன்னகையுடன் இருங்க. யாரைப் பற்றியும் யாரிடமும் பற்ற வைக்கக்கூடாது என்பதை நல்லா நினைவு வெச்சுக்குங்க. வாகனத்தை இயக்கும் முன் அது பற்றிய எல்லாவிஷயங்களையும் கவனமாகப் பார்த்துக்குங்க.

2020 இனிதாகுக. குட்லக்.

கடகம்

குடும்பத்தினரோ.. உறவினரோ… நண்பர்களோ .. யாராயிருந்தாலும் அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீங்க. ஜாக்கிரதைங்க. அலுவலகத்தில் / பள்ளியில் / கல்லூரியில் உங்களின் தனித்திறமை களை வெளிப்படுத்துவீங்க. அழகு, அறிவு கூடும். எனவே கவர்ச்சி அம்சம் அதிகமாகும். இதனால் காதல் வாழ்க்கை மேம்படும். மகளின்/மகனின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சூப்பராய் நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு / மகளுக்கு அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அநேகமாக அது கல்வி சம்பந்தப்பட்ட பயணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. பழுதாகிக் கிடந்த பழைய வாகனத்தை ஒரு வழியா மாற்றுவீங்க.

2020 இனிதாகுக. குட்லக்.

 சிம்மம்

நீங்க எப்பவுமே துரிதமான தைரியமான தீர்மானங்களை எடுப்பவராச்சே. இப்போ உங்களுக்கு ஒத்து வராத, எதற்கும் உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.  அப்புறம் எதுக்காக ஃபீல் பண்றீங்க? சரியான முடிவுதான் எடுத்திருக்கீங்க. திடீர்ப் பயணங்கள் இருக்கும். அது நல்லபடியா அமைவதோடு நல்ல ரிசல்ட்டும் இருக்கும். யாரையும், யாருக்கும், எந்தக் காரணத்துக்காகவும் ரெகமண்ட் செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். அதனால் பரவாயில்லை. ஒரு முதலீடு மாதிரி நினைச்சுக்குங்க. அலவலகத்தில் முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். கவனத்தை சிதறவிட வேண்டாம்.  மம்மிகூட வீண் விவாதம்  வராதபடி பார்த்துக்குங்க. தாய்வழி சொத்தை பெறுவீங்க.

2020 இனிதாகுக. குட்லக்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 1 முதல் 4 வரை

கன்னி

காதல் கைகூடும். மம்மி டாடியின் அறிவுரைகள் இப்போது கசந்தாலும் பின்னர் புரிஞ்சுக்குவீங்க. திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். விடுபட்ட பாடத்தை முடிச்சு (அதாவது அரியர்ஸ் கிளியர் செய்து) உங்க தகுதிக்கு ஏற்ற நல்ல வேலையில் ஜாயின் பண்ணிடுவீங்க. ஆடை அணிகலன்கள் அன்பளிப்பாய்ச் சேரும். உங்களின் நடவடிக்கைகளை தலைமைப் ொறுப்பில் உள்ளவங்க உற்றுப் பார்த்துக்கிட்டிருக்காங்க. அது உங்களுக்குத் தெரியாது. கவனமாய் இருங்க. அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலில் கொஞ்சம் தள்ளியே இருங்கள். அப்பதான் ரிஸ்க் எதிலும் மாற்ற மாட்டீங்க. ஆஃபீசில் உங்களைக் கசக்கிப் பிழிந்து, அல்லாட வைத்த மேலதிகாரி வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுவார்.  அல்லது அவரே வேறு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவார். எப்படியோ.. நீங்க தப்பிச்சீங்க.
2020 இனிதாகுக. குட்லக்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 4 முதல் 6 வரை

துலாம்

இத்தனை காலமாய்த் தள்ளிப் போயிக்கிட்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாமே இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உங்களோட புதிய மேலதிகாரி வியப்பார். அலுவலகத்தில்  மற்றவர்களோட பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேர்ந்தால் டென்ஷன் ஆகாதீங்க. மனப்பூர்வமாச் செய்யுங்க.  சக ஊழியர்களில் சிலர் உங்க மேல பொறாமை உள்ளவங்க (ஆமாங்க. இது இல்லாம எந்த ஆபீஸ்தான் இருக்கு?)  உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். ஸோ வாட்? உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காதுங்க. ஆனால் பொதுப்படையா அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள். குடும்பத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷமும் குதூகலமும் மறுபடியும் வந்து ஒட்டிக்கும். டோன்ட் ஒர்ரி.

2020 இனிதாகுக. குட்லக்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 6 முதல் 9 வரை

விருச்சிகம்

தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்திற்கு மாற்றப்படுவீர்கள். அல்லது பொறுப்பு சற்று அதிகமாக உள்ள வேறு இடத்துக்கும் மாற்றப்படலாம். இருக்கட்டுங்க. பொறுமையா இருங்க. காலப்போக்கில் சம்பளம் உயரும். குடும்பத்தில் ஹாப்பி விஷயங்கள் நடக்கும். நீங்கள் சொன்ன சொல் தவற மாட்டீர்கள்.  எந்தப் பக்கமும் உங்க தராசு தாழாது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆனால் அதைப் பயன்படுத்திக்காதீங்க. சொத்து வாங்க முன் பணம் தருவீங்க. பயப்படாதீங்க. சொத்து நல்லபடி கைக்கு வரும். இத்தனை காலமாய்த் தள்ளிப் போயிக்கிட்டிருந்த திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் முன்பைவிட இப்போ அன்யோன்யம் அதிகரிக்கும்.

2020 இனிதாகுக. குட்லக்.

தனுசு

விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்க கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மனசில் இருந்த தீய எண்ணங்கள் டாட்டா சொல்லிவிட்டுப் போகும். உஷ்ணம் சம்பந்தமான உடல் உபாதைகள் காணாமல் போய் மனசில் நிம்மதியும், அமைதியும் பரவும். உத்யோகத்தில் இடமாற்றங்கள் இருக்கலாம். அது மனசளவில் உங்களை பாதிக்காது. அலுவலகத்தில் இத்தனை காலமாய் உங்களுக்கு இருந்த வந்த சம்பளப் பிரச்னை ஒரு வழியாய் முடிவுக்கு வருமுங்க.  வேலை சம்பந்தமாக இருந்து வந்த  நெருக்கடிகள் நீங்கும். தாயாருக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வாகனத்தை இயக்கும் போது கவனம் சிதறாமல் பார்த்துக்குங்க. குழந்தைகள் வாழ்வில் சிறப்பான உயரத்தை எட்டுவாங்க. 2020 இனிதாகுக. குட்லக்.

மகரம்

சகோதர சகோதரி வகையில் இத்தனை காலமாக இருந்து வந்த  டென்ஷன்கள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.  பல காலமாய் இருந்து வந்த தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.  நல்லவிதமான.. சந்தோஷம் தரும் செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக வீட்டில் திருமணம்.. குழந்தை பிறப்பு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றன. புதிதாக வீடு/ ஃப்ளாட் / நிலம்  வாங்குவீங்க. தந்தைவழி உறவினர்களின் உதவிகள் உண்டு. எனினும் அவங்களுக்காக நீங்க கொஞ்சம் செலவுகள் செய்ய வேண்டியிருக்குமுங்க. உங்களுக்கு  அல்லது உங்களின் கணவருக்கு /மனைவிக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பொதுவாகவே பர்சனலாகவோ.. அலுவலக விஷயமாகவோ பயணங்கள் அதிகரிக்கும். 

2020 இனிதாகுக. குட்லக்.

கும்பம்

பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கும்.அலுவலக விவகாரங்களுக்காக வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு.  சமீபகாலமாக லாபங்கள் அதிகரித்துக்கொண்டே போகும். ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் லாபங்கள் வந்துகொண்டே இருக்கும். மனதில் உள்ளதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாகப் பேசி விவகாரங்களில் சிக்கித்தவித்தீர்கள் அல்லவா. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுவிட்டீர்கைள். எனவே டோன்ட் ஒர்ரி. இனி அந்தப் பிரச்சினைகள் எதுவும் தலைதூக்காது. தவிர..  இனிமேல் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீங்க.

2020 இனிதாகுக. குட்லக்.

மீனம்

நீங்கள் கல்யாணமாகாதவரா? திருமணத்திற்குக் காத்து நிற்பவரா? எனில் காத்திருந்ததற்கேற்ப நல்ல கணவர் / மனைவி வந்தமைவார். பேச்சில் முதிர்ச்சியும் மென்மையும் வரும். தெய்வீக விஷயங்கள் பேச ஆரம்பிப்பீர்கள். அலுவலக சூழல் அருமையாக இருக்கும். வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்ய வேண்டி ஆன்சைட் வாய்ப்புகள் வரும். நண்பர்கள், உறவினர்கள் என்று ஏகப்பட்ட நபர்கள் வந்த போவதால் வீட்டில் கலகலப்பு அதிகரிக்கும். வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு வரும். வாகனங்கள் வாங்குவீங்க. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீங்க. கணவன் மனைவிக்குள்  நல்ல புரிதல் இருக்கும். உங்களால்தான் குடும்பம் தலைநிமிரப் போகுதுங்க. மாணவர்கள் ப்ளீஸ்.. கெட்ட நண்பர்களை ஒதுக்குங்க. அவங்க உங்களைக்  கெட்ட வழியில் அழைச்சுக்கிட்டுப் போகாதபடி உங்களை பத்திரமாய்ப் பார்த்துக்குங்க.

2020 இனிதாகுக. குட்லக்.