Random image

வார ராசிபலன்: 05.04.2019 முதல் 11.04.2019 வரை!  வேதா கோபாலன்

மேஷம்  

பேச்சுக்கு ஒரு ஃபில்டர் போட்டுக்குங்க. வார்த்தைகளை மிகவும் கவனமாய்க் கையாளுங்க. “ஐயோ.. நான் வேணும்னு சொல்லலை“ என்றும்  அப்படி நினைச்சுச் சொல்லலை“ என்றும் எவ்வளவு சொன்னாலும் எடுபடாது. இத்தனைக்கும் உண்மை உங்க பக்கம் இருக்கும். எனவே பேச்சு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துவிட்டால் போதும், மற்றபடி சூப்பர்  நேரம்தான் உங்களுக்கு. சகோதர சகோதரிகளின் வாழ்க்கை உயரும். அதற்கு நீங்களும் ஒரு காரணியாக இருப்பீங்க. நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணாமல் போக்கியிருந்த உங்க ஒற்றுமை இப்போ மறுபடியும் துளிர்விட்டுத் தழைக்கும்.

ரிஷபம்

அவசரமும் பதற்றமும் கூடவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருங்க. மற்றபடி நல்லாத்தான் இருக்கு எல்லாமே. அதிலும் திடீர் அதிருஷ்டம் என்றால் என்ன என்பதை அனுபவத்தில் தெரிஞ்சுக்குவீங்க. பேச்சினால் நன்மை ஏற்பட்டு அலுலவக ரீதியாக லாபம் கிடைக்கும். அலுவலகத்துக்கும் நன்மை எற்படும் என்பதால்  உயர் அதிகாரிகள் முதுகில் தட்டிப் பாராட்டுவாங்க. வாகனங்களில் செல்லும்போது சாகசங்கள் எதுவும் செய்யாமல் அமைதியாய் ஓட்டுங்க. சருமம் சம்பந்தமான சின்னப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவையெல்லாம் சின்னப் பிரச்சினைகதான் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்க ஏதாவது பயங்கரமாய்க் கற்பனை செய்துக்கிட்டு டென்ஷன் ஆகாதீங்க. தந்தை வழி சொத்துக்காகக் காத்திருந்தவர்களும் வழக்கின் ரிசல்ட்களுக்காகக் காத்திருந்தவங்களும் ஸ்வீட் எடுங்க .. கொண்டாடுங்க.

மிதுனம்

கம் ஆன். ஷாப்பிங் கிளம்ப ரெடியா? இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்ந்மு அதுதான் செய்துக்கிட்டே இருக்கப்போறீங்க. எதுக்குன்னு கேட்கறீங்களா? திருமணம் நிச்சயமாகி யிருக்குமே. ஒரு பக்கம் வாழ்க்கை பற்றிய உற்சாக சிந்தனைகள்.. ஒரு புறம் கல்யாண ஏற்பாடு பற்றிய டென்ஷன்கள்.. களைப்புகள் என்று சந்தோஷமாகப்  பொழுது போகும். அளவுக்கு அதிகமாக யாரிடமும் எது பற்றியும் எதுவும் பேச வேண்டாம். அலுவலகம் சம்பந்தப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகுகிறேன் பேர்வழி என்று மனசில் உள்ளதை யெல்லாம் பகிரவும் வேண்டாம். கணவருக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல்  போயிருக்கும். ரைட்டா?

கடகம்

ஏற்கனவே பேட்ட ரஜினி ரேஞ்சுக்கு அலுவலகத்தில் புகழ், இன்னும் உயர்வீங்க. உங்களுக்கு மட்டுமின்றி மம்மிக்கும் உயர்வு. விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான். தைரியமாய்த் தன்னம்பிக்கையுடன் அலுவல விஷயங்களைத் தீர்மானிக்கிறீங்க. நன்மைதான் விளையும். அலுவலக விஷயங்களை மட்டுமே தற்போதைக்கு அப்படித் தீர்மானிங்க. திருமண விஷயங்களைச் சற்றே ஆலோசித்து முடிவெடுக்கணும். குறிப்பாகப் பெரியவர்கள் .. குறிப்பாக அப்பா அம்மா ஏதேனும் அட்வைஸ் சொன்னால் அதற்கு முழு மதிப்புக் கொடுங்க. குழந்தைங்களுக்கும் சகபாதிக்கும் நன்மைகள் கூடுதலாகும்.. முன்பு தீயவர்கள் உங்களுக்கு நட்பாக முயன்றார்கள். அவர்களால் என்ன தீங்கு வருமோ என்று பயந்தீங்க. இனி அவர்கள் விலகிவிட்டார்கள்.

சிம்மம்

சலிச்சுக்காதீங்க. போன மாசம்  இந்த நாளில் இருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ நல்லாயிட்டீங்கதானே? திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்குதா? வாழ்த்துக்கள். புதிய ஆடைகள். நகைகள், பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது  உங்க கையில்தான் இருக்கு. உங்களுக்காகச் செலவு செய்துக்கறது மட்டுமில்லாம மற்றவங்களும் உங்க முதுகில் ஏறிச் சவாரி செய்ய அனுமதிக் கறீங்க போலிருக்கே. அப்புறம் உங்க வங்கிக் கையிருப்பு என்ன ஆவது? பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கிராட்ஸ். திருமணம் பற்றி எதுக்காக இத்தனை கவலைப்படறீங்க. எல்லாம் தன்னிச்சையாய் நல்லபடியாய் இதோ முடிஞ்சாச்சு. எதற்கெல்லாம் பல காலம் காத்திருந்தீங்களோ அதெல்லாம் வெற்றிகரமாகத்தான் முடியும். 

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 6 வரை

கன்னி

செலவு செலவுன்னு உங்களைச் சுற்றியிருக்கும்  அம்புட்டுப் பேருங்க கிட்டயும் புலம்பறீங் களே,  எவ்ளோ சந்தோஷம் தரும் செலவுன்னு உணர்ந்துதானே இருக்கீங்க? அது ஒரு பக்கம் இருக்க.. உடல் நிலை பற்றிச் சின்ன பிரச்சினைக்குக்கூட ஏன்  இப்படி பயந்து வேகறீங்க? போதுமே உங்க  இமாஜினேஷன்….பெரிசாய் ஏதோ வந்துடுச்சு போல இருக்குன்னு ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வரைக்கும் போயிடாதீங்க. இந்த வாரக்கடைசிக்குள்ளயே பட்டுப் போல் சரியாகி கிண்ணுன்னு எழுந்து உட்கார்ந்துடுவீங்க. நீங்க சந்தோஷப்படும்படியான செய்தி உண்டு. மெயில் பாக்ஸ் வழியா சந்தோஷம் வழிந்து குடும்பத்தை நிரப்பப் போகுது. அலுவலகத்தில் வெளியூர்ப் பயணம் அனுப்புவாங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 வரை

துலாம்

அலுவலகத்தில் கடந்த சில காலமாக உங்களுக்கு  ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் பிடறியில் கால் படும் வேகத்தில்  ஓடி ஒளிஞ்சுக்கும். போன மாசம் இருந்த டென்ஷன்கள்கூட இனி இல்லை, அரியர் தொகைகள் உங்களை நாடி ஓடி வரும். எப்பப்பார்த்தாலும் எதுக்கு டென்ஷன்.. சோகம்? உங்க குழந்தைகள் பற்றி சற்று அதிக கவனம் செலுத்துங்க.  உங்களது நேரடிக் கண்காணிப்பும் அக்கறையும் கட்டாயம் இப்போ அவங்களுக்குத் தேவை. நல்ல படியா வருவாங்க. கவலை வேண்டாம். வெளிநாட்டுப் பயணம் நிர்ணயமாகும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும்.  ஆனால் அதைச் சுமை என்று நினைக்காமல் சுகம் என்று நினைத்தால் சீக்கிரத்தில் அற்புதப் பலன்கள் உண்டு. நம்புங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரை

விருச்சிகம்

அலுவலக விஷயமாய் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல  வேண்டியிருக்கும். வெற்றி வீரராய் (வீராங்கனையாய்?) திரும்பி வாருங்கள்.  வருவீங்க. சிறு சிறு டென்ஷன்களை குப்பை லாரிக்கு அனுப்புங்க. எல்லாமே தேவையற்ற அல்லது மிகையான பயங்கள்தான். கொஞ்ச நாளைக்கு வாயை செலோர் டேப் போட்டு ஒட்டிக்குங்க. யாருக்காவது ஹலோ சொன்னால்கூடப் பகை ஏற்பட வாய்ப்பு இருக்கு. வீண் பழி ஏற்பட வார்த்தைகள் காரணமாக இருக்கலாம். அதற்காகத்தான் சொன்னேன். ஜாக்கிரதை. உழைப்புக்கேத்த ஊதியம் இல்லைன்னு டென்ஷனா, இதோ சரியாப்போகப் போகுதே.  சம்பள உயர்வை எதிர்பார்க்க லாம்.  மேலும் செலவுகள் குறைஞசு சேமிப்பு அதிகரிக்கக்கூடிய காலகட்டம் இது என்பதால் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12 வரை

தனுசு

பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்கணும். எழுமின். விழுமின். சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். களைப்பு ஏற்படாமல் இருக்க ஏதேனும் வைட்டமின் மாத்திரை எடுத்துக்குங்க. உடனுக்குடன் வேறு வேறு வேலை மாறுவதைப் பொழுது போக்கு மாதிரியோ விளையாட்டுப் போலவே செய்யாதீங்க. நிலை யாய் ஒரு வேலையில் ஒட்டிக்கொள்ளப் பாருங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். கணவரோடு /மனைவியோட  ஜஸ்ட் லைக் தட் கூடச்  சண்டை வேண்டாம். ஏனெனில் விளையாட்டுப் போல் ஆரம்பிக்கும் வாக்குவாதம்  விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு இருக்கு.

மகரம்

மம்மி பற்றி நீங்கள் பட்ட கவலைகள் கற்பூரம் மாதிரிக் காணாமல் போயிருக்குமே! வெளி யூர்ப் பயணங்கள் செல்வதாக இருந்தால் நன்றாகத் திட்டமிடுங்கள்.  இந்தப் பயணத்தில் அனுபவம் உள்ளவங்களைக் கன்சல்ட் செய்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போங்க. வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா?  பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கட்டாயம் கிடைக்கும்.  பல காலம் கழித்து உறவினர்களை ஏதோ ஒரு விழாவில் சந்திக்கப்போறீங்க. சந்தோஷம் மனசில் அலையடிக்கும். மகனின் / மகளின் மேரேஜ் இதோ.. வந்தாச். வந்தாச். சற்றே பொறுமையாய் இருங்க. உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் நிர்வாகத் திறமைக்கும் கொஞ்சமும் பொருந்தாத சில குணங்கள் உங்களிடம் உள்ளன.  அவற்றை தயவு செய்து தூக்கி எறியுங்க.

கும்பம்

கணவருக்கும் / மனைவிக்கும் உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங். விட்டுக் கொடுத்துடுங்களேன்?  அவரும் உணர்ந்துவிடுவார். தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. அதிலும் பொலிவு மிக்க .. கவர்ச்சியான.. அழகிய வீடு அமையும். பயணம் போவீங்க. நிறையப் பயணம்! நீண்ட பயணம் உள்பட! ஆரோக்யமான உணவை சுகாதாரமான இடத்துல சாப்பிடுங்க…  அப்படித்தான் செய்யறீங்க என்கிறீர்களா? எனில் நோ பிரச்சினைஸ். குழந்தைகள் பற்றிய விஷயங்களுக்காக ஓடிக்கிட்டிருந்தவங்க ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க. 

மீனம்

நண்பர்களிடம் ஏழெட்டு அடி தள்ளியே இருங்க. கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். ஏன் தெரியுமா? சில காலம் கழித்த அது பற்றி நீங்க வருத்தப்பட சான்ஸ் இருக்கு.. அதனாலதான் சொன்னேன்.  அப்புறம்.. செலவு பற்றி ஏன் பயம்? நீங்களாய் மனமுவந்துதானே செலவு செய்யறீங்க. அதுவும் நல்ல செலவுங்களாச்சே. தன்னம்பிக்கை ஃபவுன்டனாய் உயரும். அதிருஷ்ட வாய்ப்புக்களை நம்பி மங்காத்தா (அல்லது கேசினோ) ஆடாதீங்க. இப்போதைக்குக் குருட்டு அதிருஷ்டமெல்லாம் இல்லை. உழைச்சா மட்டுமே நன்மை. அப்படி உழைச்சால் சிலருக்கு 2 வித லாபங்கள்கூட உண்டு. திடீரென்று நிறைய வாய்ப்புகள் தேடி வரும். அத்தனையும் உங்களின் திறமையை நேர்மையாய் உபயோகப்படுத்தி  நல்ல வழியில் சம்பாதிப்பதற்குத்தான் இருக்கும். வாழ்த்துகள்.