வார ராசிபலன்: 05.07.2019 முதல் 11.07.2019 வரை! வேதாகோபாலன்

மேஷம்  

கணவன் மனைவி ஒருத்தருக்கொருத்தர் மிகவும் சப்போர்ட்டாவும் இருப்பீங்க. வழிகாட்டி யாவும் இருப்பீங்க. சிலருக்கு திடீர்னு அரசாங்கம் மூலம் நன்மையும் லாபமும் கிடைக்கும்.  ஆரோக்யத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும் தலைக்கு வந்தது ஹெல்மெட்டுடன் போயிற்று என்பதுபோல் டாட்டா காண்பித்துவிடும். பயம் வேண்டாங்க. சகோதர சகோரிகள் ஒரு சமயம் கோபப்பட்டாலும் மறு சமயம் இன்முகத்துடன் ஆதரிப்பார்கள். கல்வி சம்பந்தமான உங்க முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பாலினத்தினர் மூலம் திடீர் அதிருஷ்ட வாய்ப்பு வந்து காலிங்பெல் அடிக்குங்க. அப்பாவின் வாழ்வில் திடீர் நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத் தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவும்.

ரிஷபம்

உங்களுக்குக் கலை சம்பந்தமான ‘இன்கம்‘ வரும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங் களில் சற்று ஆமை வேகம் இருந்தாலும் கண்டுக்காம விடுங்க. மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் முன்பைவிட அதிகமாகும். கோயில்களுக்குப் போவீங்க. பல நாளாய்ப் பெண்டிங் கில் இருந்த குலதெய்வ வழிபாடும் பிரார்த்தனைகளும் நிறைவேறும். குழந்தைகளோடு ஜாலியாய் ஊர் சுற்றுவீங்க. டூர்கள் போவீங்க. பொதுவாழ்வில் புகழ்கூடும் வாரம் இது. புது முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீங்க.. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் அதிகரிக்கும். . புதிய  பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. பாராட்டு, அவார்ட், ரிவார்ட் ஆகியவை யெல்லாம் வரிசையாய் வந்து உங்களை மீட் பண்ணும்.

மிதுனம்

உங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி கொள் தாத்தா கொள் பாட்டி பக்கத்துவீட்டு ஆன்ட்டி என்று ஊர் முழுக்க எதிர்பார்த்திருந்த.. மற்றும் இறைவனை வேண்டியிருந்த அந்த நல்ல செய்தி வந்தாச்சுங்க. கவலையைவிடுத்து நிம்மதியாச் சிரிங்க பார்ப்போம். நீங்க மிக உற்சாகத் துடன் பணிபுரியும் வாரம் இது. சமீபத்தில் சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும். குறிப்பாக அவர்கள் எதிர்பாலினத்தவர்கள் என்றால் உங்கள் குடும்பத்துக்கே நன்மை செய்வார்கள். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்தை யும் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை நல்லா  நினைவில் வெச்சுக்குங்க. சம்பாதிக்கவும் சந்தோஷத்துக்கும் நேர்வழியை மட்டுமே தேர்ந்தெடுங்க.

கடகம்

அலுவலகத்தில் ஏற்படும் சின்னச்சின்னத் தடைகள் தானாய்ச் சரியாகும். வாழ்க்கையில் ஸ்டெப் ஸ்டெப்பாக முன்னேற ஆரம்பிச்சிருக்கீங்க. ஏன் கவலைப்படறீங்க? ஷ்யூரா நல்லது நடக்கும். நம்பிக்கையுடன் இருங்க. வெளியூர்வெளிநாடுன்னு ஏகப்பட்ட பயணங்களும் அலைச்சல்களும் இருக்கும். தாராளமாகச் செலவிட்டு மகிழுவீங்க. தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றி யோசிப்பதோடு அவற்றை நல்ல முறையில் நிறைவேற்ற வும் செய்வீங்க. அலுவலகத்தில் மற்றும் நண்பர்கள்/ உறவினர் மத்தியில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள். தொலைபேசி வழியாக உங்க காதில் வந்து விழப்பபோகும் தகவல் மகிழ்ச்சியைத் தரும்.. என்ஜாய்.

சிம்மம்

லக் அதிகரிக்கும். கூடப் பிறந்தவர்களின் தயவும் அன்பும் முன்பைவிட அதிகமாய் சப்ளை ஆகும். புகழும் வருமானமும் பாராட்டும் கைதட்டலும் நிறையக் கிடைக்கும். உங்கள் டென்ஷன் எதையும் துரிதப்படுத்தாது என்பதை நல்லா நினைவில் வெச்சுக்குங்க. அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் வாரம் இது. . அன்பு நண்பர்களின் ஆதரவும் உறவினர்களின் உதவியும்  பெருகும். அந்நிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும்.  ஒரு வேளை நீங்க ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கறவங்க என்றால் தைரியமாக ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கலாம். அப்பாவுக்கு அதிருஷ்ம்  அதிகமாகும். உங்க வருமானம் இருமடங்காகும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமாக அதிகரிக்கும்.

கன்னி

பணிவுதான் நல்ல சினேகிதங்களையும் பாராட்டுகளையும் வாங்கித் தரும் என்பதை மறக்காதீங்க. குழந்தைங்க வாழ்க்கைல பெருமிதப்படும்படியான சம்பவங்கள் நடக்கும். இரண்டு  மூன்று வழிகளில் லாபம் அல்லது வருமானம் வரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். நீண்ட நாள் எண்ணங்களும் ஆசைகளும்  நிறைவேறும். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும். சாதுர்யமாக செயல்பட்டு பொருள்வரவை அதிக மாக்கிப்பீங்க. பலகாலம் . வராத உறவினர்கள் திடீரென வருவதற்கு சான்ஸ் அதிகம்.. சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் அகலும். நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் வாரம் இது. பெரியவங்க கிட்ட  ஆசீர்வாதம் வாங்குவீங்க.  .

துலாம்

மம்மி பற்றி இருந்த கவலையையெல்லாம் டெலிட் செய்யுங்க. உங்க அலுவலக வேலைக்கு பாஸ் ‘லைக்‘ போடுவார். கிளைமேக்ஸ்ல நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. அது புரியுதா இல்லையா? நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வர்.  அவர்களை நீங்க புரிஞ்சுங்ககிட்டாலும் இல்லைன்னாலும் அவங்க உங்க கிட்ட உயிராய் இருப்பாங்க. முன்பு விலகிச் சென்ற உறவினர்கள்  இப்போ உங்க அருமையைப் புரிஞ்சுக்கிட்டு உங்களை விரும்பி வந்து ஒட்டிக்குவாங்க. நீங்களும் மன்னிச்சு ஏத்துக்குவீங்க. .  தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசாங்கத்திடமிருந்து நீங்க எதிர்பார்த்த  நன்மைகள் கட்டாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

என்னமோ பயந்துக்கிட்டிருந்தீங்களே? போகப் போகப் பாருங்களேன். மகிழ்ச்சியின் லெவல்  மெல்ல மெல்ல நீர்மட்டம் மாதிரி உயர்ந்து திக்குமுக்காடச் செய்யும். மம்மியிடமிருந்து வழக்கமான அளவைத் தவிர அதிக அளவு நன்மைகள் உங்களைத் தேடி ஓடி வரும். தேவையேயில்லாத பொ’ழுது போக்குகளில் மனசைச் செலுத்துகிறீர்களே.. அடடா.. அந்த நேரத்தில் ஆக்கப் பூர்வமாய் ஏதாவது செய்யலாம். அல்லது பிரார்த்தனையில் ஈடுபடலாமே.  அதைவிட்டுப்புட்டு…. சரி இனிமேல் கவனமாய் இருந்துக்குங்க. தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்குங்க. உங்க பலம் உங்களுக்குத் தெரியாது. எனவே கண்ணாடியைப் பார்த்து அவ்வப்போது “நீ பலசாலி”ன்னு சொல்லி நினைவுபடுத்திக்குங்க. ஓ கேயா?

தனுசு

புது வேலை தேடப் போறீங்களா? சில மாசங்கள் கழித்துக் கிடைக்கும். மாணவர்களே… பரிசுகள் காத்திருக்கு. போட்டிகளில் கலந்துக்குங்க. வாகனம் வாங்கணும் வாங்கணும்னு ரொம்ப நாளாய்த் தூக்கத்திலும் விழிப்பிலும் கனவு கண்டுக்கிட்டிருந்தீங்க. அது  நினை வாகும். குடும்பம் இணைந்து உல்லாசமாகப் பயணமெல்லாம் போவீங்க. பல வருஷம் சந்திக்காத சொந்தக் காரங்களையெல்லாம் மீட் பண்ணுவீங்க.  நீங்க அரசியல்வாதியா? எனில் பொதுவாழ்வில் புகழ்கூடும். புது முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். புதிய  பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும். கிடைக்கும் வாய்ப்பைச் சரியாய்ப் பிடிச்’சுக்கணும். கவனமாயிருங்க.

சந்திராஷ்டமம் : ஜூலை 3 முதல் ஜூலை 6 வரை

மகரம்

நண்பர்களால்/ சினேகிதிகளால் அதிக நன்மை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அவங்க மேல பாயாதீங்க. அவங்க நிலமையைப் புரிஞ்சுக்குங்க. உங்க எண்ணங் களும் கனவுகளும் நீங்க நினைச்சதைவிடவும் நல்ல வகையில் பலிக்கும். பகைவர்கள் நண்பர்களாவார்கள். நண்பர்கள் இன்னும் நெருங்குவார்கள்.  நட்பு வட்டம்  விரிவடையும். எதிர்பாலினத்தினருடனும் ஆரோக்யமான நட்பு தொடரும். வீடு அல்லது நிலம் அல்லது ஃப்ளாட் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். போன்மூலம் ஹாப்பியான தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுக மில்லாதவர்களின் உதவியை தயவு செய்யது நாடவும் வேண்டாம் ஏற்கவும் வேண்டாம்.

சந்திராஷ்டமம் : ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை

கும்பம்

முன்பு போல் மீண்டும் சேமிப்பை நோக்கி உங்க பைனாக்குலரை நகர்த்துங்க. டென்ஷன் வேண்டாம். பயம் வேண்டாம்… கடைக்குப் போய் கார்ட் தேய்ச்சு … காஸ்ட்யூம்களும் அழகு சாதனங்களும் அலங்காரப் பொருட்களும் வாங்கிப் போட்டுப் போட்டு உங்க ஷாப்பிங் பையெல்லாம் வெயிட்டாயாச்சு. ஸ்பீட் பிரேக்கர் போடுங்க.  ஏனெனில், நல்ல நல்ல சுப செலவுகள் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்குங்க. பண வரவு திருப்தி தரும். பல நாள் நீங்க ஆசைப்பட்டுக்காத்திருந்த ஆசைகள்/  எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீடு கட்டும் / வாங்கும் முயற்சி வெற்றி தரும். நீங்க பிசினஸ் செய்பவர் என்றால் பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் உள்ளவர்களின்  பல நாள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதனால் உங்க முக்கியத்துவம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 8 முதல் ஜூலை 10 வரை

மீனம்

கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. நீங்க மாணவியா அல்லது மாணவரா? அப்ப சரி. அதிருஷ்ட சக்கரம் உங்க பக்கமாய்த்தான் சுழலுது. உங்க கிட்ட என்ன தெரியுமா பிரச்சினை? கவலைப்பட வேண்டாத விஷயங்களுக்கு ஏராளமாய்க் கவலைப் படுவீங்க. அதுதான் பிராப்ளம். ஆலய வழிபாட்டால் அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகளில் தோள்கொடுத்துக் கைதூக்கிவிட உதவி செய்வீங்க. தந்தையின் . உடல் நலம் சீராவதற்காக ஒரு  சிறு தொகையைச் செலவிட வேண்டி வரலாம். . குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல் லது. பிசினஸ் கூட்டாளிகளால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 10 முதல் ஜூலை 12 வரை

கார்ட்டூன் கேலரி