வார ராசிபலன்: 05-10-18 முதல் 11-10-18 வரை! வேதா கோபாலன்

--

மேஷம்

வயிற்றுக்கும் ஈயப்படும் என்று வள்ளுவர் சொன்னதை நீங்க  தப்பாப்புரிஞ்சுக்கிட்டு நிறைய சாப்பிட்டு வைக்காதீங்க. அலுவலகத்தில் அதிகாரியைக் கொஞ்சம்.. இல்ல .. இல்ல.. நிறைய அனுசரிச்சுப் போகணுங்க. ப்ளீஸ். பல விஷயங்கள் உங்க எதிர்பார்ப்புக்கு ஆப்போசிட்டாத்தான் இருக்கும். உடனே டென்ஷன் ஆகாதீங்க. எதுக்கு பயந்தீங்களோ அது நடக்காம போகவும் வாய்ப்பிருக்கில்லையா? குழந்தைங்களோட.. குடும்பத்தோடு மகிழ்ச்சியாவும் சந்தோஷமாவும் நிம்மதியாவும் நிறைவாகவும் டைம் செலவழிப்பதற்கான நேரம் வந்தாச்சு.

ரிஷபம்

அப்பாடா. நிறைய உழைச்சதற்குக் கொஞ்சம் பலன் வர ஆரம்பிச்சாச்சு, ஆனா நீங்க கொஞ்சம்தானேன்னு உடனே புலம்பாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும். நீங்க நினைச்ச நிலையைக் கட்டாயம் எட்டும். ஓகேயா? முன்பு இருந்ததைவிட இப்போ  அலைச்சல் கொஞ்சம் குறையும். ஆனாலும் ‘அப்போ நல்லா இருந்துச்சே‘ என்று நினைக்காம இருக்க முடியாதே உங்களால.. அக்கரைப்பச்சை.  சகோதர சகோகரி களின் வாழ்க்கை ரொம்பவே மேம்படும். அதைப் பார்த்து சந்தோஷமும் பெருமிதமும் நீங்க அடைவீங்கதான்.ஆனா அதை அவங்க புரிஞ்சுக்கிட்டாங்களான்னு கேட்டா.. ஸாரிங்க. பட்.. அது பற்றி ஏங்க நீங்க கவலைப்படறீங்க.

மிதுனம்

இந்த வாய் இருக்கே.. வாய். அதுக்கு நல்லதா ஒரு திண்டுக்கல் பூட்டு வாங்கிப்போட்டுக்குங்க. அல்லது நவீன நம்பர்லாக் வாங்கி மாட்டிக்குங்க. அதையும் மீறி ஒன்றிரண்டு வார்த்தைகள் வந்துடும். கஷ்டப்பட்டு  கன்ட்ரோல் பண்ணிக்குங்க. காரணம்.. பின்  விளைவை நீங்கதாங்க சந்திக்கணும். உங்களுக்கு பதில் பிராக்ஸியா போட முடியும்? கடன் வாங்கறது அவசியம் என்றால் மட்டுமே அது பற்றி யோசிங்கப்பா. இல்லாட்டி வேணவே வேணாம். குறிப்பா நேர்மையில்லாத நபர்களிடம் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டி வரலாம். கேர்ஃபுல். ஒரு வேளை ஏற்கனவே நீங்க வங்கியிலிருந்து லோன் எதுவும் எடுத்திருந்தால் .. கவலையே படாதீங்க. பொறுப்பா அதை அடைக்க ஆரம்பிப்பீங்க.. அல்லது யார் கண்டா.. இந்தத் தவணையோட அடைச்சிருப்பீங்களே!

கடகம்

உற்றவர்கள் வெளிநாடு போவாங்க. அவங்களை நிறையவே மிஸ் பண்ணுவீங்க. ஆனாலும் என்னங்க. அவங்களோட நன்மைக்கும் முன்னேற்றத்துக்கும்தானே கிளம்பிப்போயிருக்காங்க. அதனால மனசை அமைதிப்படுத்திக்குங்க. ரொம்பவே பயந்த விஷயம் ஒண்ணு ‘அப்பாடா’ன்னு மன நிம்மதி கொடுக்கும் வகைல நல்லபடியா முடிஞ்சு வயிற்றில் மில்க் வார்க்கும். கணவன் மனைவிக்குள்ள நிறைய மன வேற்றுமைகள் இருந்தாலும்தான் என்ன? எப்போ தேவையோ அப்போ நல்ல ஒற்றுமை ஏற்பட்டு விஷயங்களை நல்லபடி முடிச்சு வெற்றிகரமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்து.. புரிஞ்சுக்கிட்டு.. சந்தோஷமாய்ப் புன்னகைப்பீங்க.

சிம்மம்

செலவுகள் வரும்தான். ஆனால் அது பற்றி டென்ஷன் அல்லது வருத்தம் உங்களுக்கு ஏற்படாது. காரணம் நம்பர் 1… அந்தச் செலவுகள் நீங்க ரொம்பவும் ஆசையா எதிர்பார்த்ததா இருக்கம். ந.2. நீங்க செய்யும் செலவு உங்களுக்கு மட்டுமில்லாமல் குடும்பத்தில் உள்ளவங்களுக்கு மன நிறைவும் சந்தோஷமும் திருப்தியும் முன்னேற்றமும் கொடுப்பதாய் இருக்கும். சுருக்கமாச்சொன்னால்.. படிப்பு.. திருமணம் போன்ற விஷயங்களுக்குச் செய்யும் சுபமான, மகிழ்ச்சியான செலவாக இருக்கும். பல காலமாய் வெளிநாட்டில் வேலைக்குப்போகணும்னு முயற்றி செய்து செய்து செய்து அது தள்ளிப்போய்கிட்டே இருந்துச்சில்லையா? வாவ். அது இப்போ நிறைவேறப்போகுதுங்க. ரெடியா இருங்க.  வயசானவங்க தங்கள் குழந்தைங்களோட நேரம் செலவு செய்ய வெளிநாடு போவீங்க.

கன்னி

குழந்தைகளோட முன்னேற்றத்தைப் பார்த்து ஒரு பக்கம் சந்தோஷப்படும் அதே நேரத்தில் உங்க வாழ்க்கை யிலும் நல்ல முன்னேற்றம் வருமுங்க. சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகம். அது நேர்மையாகவும் இருக்கும். பிரதர்ஸ்.. மற்றும் சிஸ்டர்ஸ் வாழ்க்கையில் முன்னேறுவாங்க. அவங்களால் உங்களுக்கு மிகுந்த நன்மையும் லாபமும் உண்டு. கண்டிப்பா உண்டு. நண்பர்கள்.. உறவினர்கள்… அக்கம்பக்கத்தினர்.. அலுவலக நண்பர்கள் என்று யாராயிருந்தாலும் எந்த விஷயத்தையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று டீல் செய்யாதீங்களேன். சற்றே ஆர அமற யோசிச்சு .. நின்று நிதானிச்சு செயல்படுங்க. நிச்சயமா உருப்படு வீங்க. உங்க ராசி நேயர்களுக்கு தற்போது மிகவும் அவசியத் தேவை .. நிதானம் மட்டுமே. ஓகே?

துலாம்

அருமையான.. பிரமாதமான.. சூப்பரான கால கட்டம் ஆரம்பிச்சுடுச்சுங்க… இது நாள் வரைக்கும்  இருந்து வந்த சிரமங்கள் ..இழுபறிகள், பிரச்சினைகள், கவலைகள், கஷ்டங்கள் எல்லாமும் முடிஞ்சு விடிஞ்சாச்சு என்றால் அது சத்தியமான உண்மைங்க. குழந்தைகள் பற்றி எவ்ளோ டென்ஷன் பட்டீங்க.இப்போ அவங்க உங்க வயிற்றில் ஜில்லென்ற ஐஸ் பால் ஊற்றினார்களா இல்லையா? குடும்பத்தில் என்னா ஒரு சந்தோஷம்.. என்னா ஒரு ஒற்றுமை.. என்னா ஒரு மகிழ்ச்சி! வாவ் . வங்கியில் போட்டிருந்த இருப்பு உயரும். பேச்சில் ஒரு துல்லியமும்.. ஒழுங்கு முறையும் நியாயமும் நேர்மையும் விளங்கும். எனவே உங்கள் பேச்சுக்கு மதிப்பு தன்னிச்சையாய் அதிகரிக்கும். ஆரோக்யம் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் தானாய்க் காணாமல் போகும்.  

விருச்சிகம்

சூப்பர் நேரம் வந்தாச்சு என்று சொன்னால் அது சற்று மிகை. எனினும் கஷ்டகாலத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சாச்சு என்றால் அது மிக  உண்மை. குழந்தைகள் தங்கள் சாதனைகளால் உங்களை சந்தோஷப்படுத்துவதோடு பெருமைப்படுத்தவும் செய்வாங்க. கல்யாண மேளம் கொட்டும். ரிஸப்ஷனில் ரோஜாப்பூ மாலை மின்னும்.  குடும்பத்தில் குழந்தை அல்லது மனைவி அல்லது கணவன் புதிதாக அடிஎடுத்து வைக்கப்போவதால் புது வரவு இனித்துக் குடும்பம் சந்தோஷமாகப் பெரிதாகும். அப்பாவுக்கு உங்களாலும் உங்களுக்கு அவராலும் நன்மையும் சந்தோஷமும் ஏற்படும்.

தனுசு

ஒரு நாளைக்கு இருந்த மாதிரி ஒரு நாளைக்கு வாழ்க்கையும் இருக்காது.. உங்க செயல்முறைகளும் இருக்காது. “உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே”  என்பார்கள் உங்களைச் சுற்றி உள்ளவர்கள். நீங்க எப்ப சிரிப்பீங்க.. எப்ப அடிப்பீங்க.. எப்ப கடிப்பீங்க என்று அவங்களால அனுமானிக்கவே முடியாது. ஒரு வகையில் அது உங்களுக்கு நன்மைதான் என்றாலும், எப்பவுமே நன்மை என்று சொல்ல முடியாது இல்லையா? எனவே மாத்திக்குங்களேன். நிறைய செலவுகள் வரும். அதனால என்னங்க? கல்யாண மண்டபத்துக்கு அட்வான்ஸ் குடுக்கவும், மாலை கட்டுபவர் மற்றும் மேளக்காரர்களுக்குப் பணம் கொடுக்கவும்… வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான போக்கவரத்துக்கு ஏற்பாடு  செய்வதற்கும்தானே இருக்கும்?  தென் வாட்?

சந்திராஷ்டமம் : அக்டோபர் 4 முதல் 6 வரை

மகரம்

கடன் அனுமதிக்காகக் காத்திருந்தவர்களுக்கு அது சிரமமின்றிக் கிடைக்கும்.  மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதிலேயே குணமடைவீர்கள். பயம் வேண்டாம். அறுவை சிகிச்சை.. அது .. இது என்று அலைய வேண்டியிருக்காது.  டென்ஷனும் கிடையாதுங்கோ. வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் வரும். அல்லது தற்போது உள்நாட்டில் உள்ள அலுவலகத்திலேயே உங்களை வெளியூர்  அல்லது வெளிநாட்டில் வேலைபார்க்க அனுப்பி வைப்பார்கள். தற்காலிக வெளிநாட்டு உத்யோகம் என்றாலும் சற்று அதிக காலம் தங்க வேண்டி வரலாம். தந்தையின் உடல் நலன் எந்த அளவு தீவிரமாக சிரமப்படுத்தியிருந்தாலும் அந்த அளவு பிரச்சினையின்றி எளிதாக குணமாகி நிம்மதி அளிக்கும். உங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பாராட்டியே தீரவேண்டும், கோபம் வந்து குதித்தாலும் வெகு சீக்கிரத்தில் ‘குணமா’ பேச ஆரம்பிச்சுடுவீங்க. யாரிடம் தவறு இருந்தாலும் தழைஞ்சு போய் கன்வின்ஸ் செய்துடறீங்க. வாழ்த்துகள்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 6 முதல் 8 வரை

கும்பம்

புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடை.க்கும். தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. இது மிகவும் பாராட்ட வேண்டிய குணம். இதனால் நல்ல பெயர் மட்டுமில்லீங்க. உங்க ஆரோக்யமும் பிழைக்கும். பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்க. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க. அவங்களால கொஞ்சம் சிக்கலும் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதுக்காக அதிகக் கண்டிப்புக் காட்ட வேண்டாம். உங்கள் அறிவாற்றலால் உத்யோகம் சிறக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதமோ வன்மையான சண்டையோ வராமல் பார்த்துக் கொண்டால் இருவரும் பிழைக்கலாம். குழந்தைகள் புத்திசாலித்தனமான செயல்கள் செய்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். மற்றவர்களின் கல்விக்கு உதவி செய்து புண்ணியமும்  பாராட்டும்  பெறுவீங்க.  

சந்திராஷ்டமம் : அக்டோபர் 8 முதல் 10 வரை

மீனம்

அபார்ட்மென்ட்டில் அழகான கவர்ச்சி அம்சம் மிகுந்த ஒரு வசிப்பி வாங்கப் போறீங்க. கங்கிராட்ஸ். கடன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். லோன்களை மடமடன்னு அடைப்பீங்க. குடும்பத்தோடு குஷியாய்  வெளியூர்.. வெளி மாநிலம் வெளிநாடுன்னு  சுற்றி ஜமாய்ப்பீங்க. புது வண்டி வாங்கப் போறீங்க. பார்த்து ஓட்டுங்க. அலுவலகத்தில் புதிய பொறுப்பு. அதிக சம்பளம். அபரிமிதமான மரியாதைன்னு உங்களை உயரத்தில் தூக்கி  வைப்பாங்க. இப்போ உங்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும். மரியாதையும் செல்வாக்கும் கூடும். மனசில் அமைதியும் நம்பிக்கையும் சந்தோஷமும் நிலவும். தெய்வ வழிபாட்டில் அதிகக் கவனம் செலுத்துவீங்க. எதிரிகள் வந்து காலில் விழுந்து நட்புக்கு வெள்ளைக்கொடி காட்டுவாங்க. சூப்பர்ங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 10 முதல் 12 வரை.