வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

--

 

மேஷம்

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். கோயில் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லை என்றால் டென்ஷன் வேண்டாம். அததற்கு நேரம் வர வேண்டாமா! உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க. உங்கள் பேச்சினால் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் எற்படப்போகின்றன. அப்படியே நேர் எதிராகவும் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே சற்றே வார்த்தைகளை கவனத்துடன் பிரயோசித்தால் பிரச்சினையே நேராது. ஓ.கே? உடன் பிறந்த பிறப்புக்களுடன் சண்டை.. போர்.. லடாய்.. டிஷ்யூம் எதுவும் வேண்டாம். குறிப்பா கேஸ் எதுவும் போட்டு கீட்டு வெக்காதீங்க. கண்டிப்பா அவங்க பக்கம்தான் ஞாயம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 11.05.2017 முதல் 13.05.2017 வரை

ரிஷபம்

வேலை பளு இருக்கும்தான். அது நீங்கள் புலம்பிப் பொருட்படுத்தும் அளவுக்கு இருக்காது. குழந்தைகள் பேக்கெட் பேக்கெட்டாக சந்தோஷத்தை அளிப்பார்கள். ஜாக்கிரதைங்க,, நண்பர்களா பகைவர்களா என்று கொஞ்சம் சோதிச்சுப் ப்பார்த்துப் பழகுங்க,. குறிப்பாக எதிர்பாலினத்தினரை.உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மெரூன் நிறம் உபயோகியுங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடை மேல் ஏற்றிக் கைதட்டுவார்கள். நீங்கள் புத்திசாலி என்று எல்லோருமே ஒப்புக்கொள்ளும் நேரம் வந்தாச்சுங்க…. வார்த்தைகளை கவனிச்சு கவனிச்சு ரிலீஸ் பண்ணுங்க. டாடியை நல்லாக் கவனிச்சுக்குங்க. புது வேலை தைரியமாத் தேடலாம். ஆனா இன்னிக்கு மனுப்போட்டா இன்னிக்கே சேருவீங்கன்னு கற்பனை செய்துக்க வேணாம். எல்லாத்துக்கும் நேரம் காலம் வரும்.

மிதுனம்

எதற்கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்ல முறையில் முடிஞ்சிடுச்சா?. நிம்மதியா? அலுவலகத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையை அணி யுங்களேன். எல்லாம் சீக்கிரத்தில் சரியாகும். உடை மற்றும் உபயோகப் பொருட்களில் இள மஞ்சள் கலர் உபயோகியுங்க. ரொம்ப ரொம்ப அழகான வாகனம் அமையுங்க. உங்க கனவு அப்பிடியே கண்முன்னால நிஜமாயிடுச்சில்ல? என்ஜாய். டாடியோட எப்பப்பார்த்தாலும் சண்டை வலிக்காதீங்க.. உங்களுக்கும் அவர் வயசாகும்போது தான் புரியும். புதிய வேலை தேடவேண்டாம். இருக்கும் வேலையில் நல்ல பெயர் எடுக்கப்பாருங்க, அதை நம்பி இதை விட்டுடாதீங்க. ப்ளீஸ். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடை மேல் ஏற்றிக் கைதட்டுவார்கள். நீங்கள் புத்திசாலி என்று எல்லோருமே ஒப்புக்கொள்ளும் நேரம் வந்தாச்சுங்க. வார்த்தைகளை கவனிச்சு கவனிச்சு ரிலீஸ் பண்ணுங்க

கடகம்

கணவருக்கு/ மனைவிக்குப் பல வித நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தின ருடன் இணைந்து சந்தோஷப்படப் போறீங்க அல்லது குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாவாங்க. சகோதரர்களுடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லைன்னா லும் பிரச்சினை இருக்காது. உடை மற்றும் உபயோகப் பொருட்களில் நீல நிறம் உபயோகியுங்க. யம்மா .. யம்மா.. லக் என்றால் லக் இதுவல்லவோ அதிருஷ்டம். நாலா பக்கத்திலிருந்தும் பணமென்ன பாராட்டென்ன.. நல்லது.. நல்ல வகையில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கறீங்க. பாராட்ஸ். மனதில் மென்மையும் கனிவும் கருணையும் அதிகரிக்கும். நன்மை செய்து புகழ் வாங்குவீங்க. 30 வயசைத் தாண்டியவங்களாய் இருந்தால் வாழ்வின் வெற்றிக்கான படிகளில் ஏற ஆரம்பிச்சுட்டீங்க.

சிம்மம்

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். கோயில் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லை என்றால் டென்ஷன் வேண்டாம். அததற்கு நேரம் வர வேண்டாமா! உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க. எடுத்த எடுப்பில் எழுபதாவது படியில் இருக்கணும்னா நடக்குமா! படிப்படியாகப் போவோம். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. உங்க கணவருக்கு/ மனைவிக்கு எதிர்பாராத தொகை ஒன்று கிடைக்கும். டாடிக்கும் உங்களுக்கும் யுத்தம் வராமல் பார்த்துக்குங்க. மகாலட்சுமியை மனதாரத் துதிக்கணும். ஊருக்கெல்லாம் நல்லவராய் இருக்கீங்க. வீட்டுக்குள்ளும் நல்ல பெயர் எடுங்களேன்! உங்க அதிருஷ்டம் எல்லோரும் உங்களை அனுசரிச்சுக்கிட்டுப் போறாங்க.

கன்னி

பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்கணும். எழுமின். விழிமின். சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒன்வென்றும் லாபம் அருளும். பிள்ளையாரை பின்பற்றி வணங்குங்க. சிரமம் வருவது போல் தோன்றி எல்லாம் தலைப்பாகையோடு போகும்போது அப்பாடான்னு ஆகும். அலுவலகத்தில் மேலும் சிறந்த நற்பெயர்கள் கிடைக்கும்.  கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும். காதல் துவங்க வாய்ப்புண்டு. திடீர்னு இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு பலப்படும். வர வேண்டிய தொகைகள் அப்படி இப்படி ஆட்டம் காட்டும். பிறகு கிடைக்கும். அனுமனை அனுதினமும் துதியுங்கள்.    சட் சட்டென்று திரை  போட்டுத் திரை விலக்கிக் காட்சிகள் மாறும் நாடகம் போல் அதிருஷ்டம் எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கதவைக்கூடத் தட்டாமல் ஓடி வந்து அணைத்துக் கொள்ளும். மச்சம்தான் போங்க. கவர்ச்சி அம்சம் மேம்படும். காதல் வளரும்.

துலாம்

கோபத்துக்கு வழியே கொடுக்காதீங்க,. எந்தச் சூழலிலும்…யார் உங்களுக்கு டென்ஷன் ஊட்ட முயற்சித்தாலும் கம்மென்றிருங்கள். பொறுமைக்குப் பரிசு அடுத்த பஸ்ஸில் வந்து கொண்டே இருக்கும். உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பளிச்சென்று கண்ணைக் கவரும் வெள்ளையை  உபயோகி யுங்க.  ஆதித்தனை அணுவளவும் மறக்க வேணாம் . கன்னா பின்னா என்று குரல் உயர்த்திக் கத்தத் தோன்றும். பின் விளைவுகளை யோசித்துப் பேசுங்க! (குறிப்பாய் அலுவலகம் பள்ளி கல்லூரியில்…) கல்யாண முயற்சிகள் டாப் கியரில் போகலைன்னு டென்ஷனாகாதீங்க. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யார்  ஐடியா கொடுத்தாலும் தூக்கி சிக்ஸர் அடிச்சுடுங்க.

விருச்சிகம்

விநாயகரை வினாடியும் மறக்காதீங்க. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். கோயில் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லை என்றால் டென்ஷன் வேண்டாம். அததற்கு நேரம் வர வேண்டாமா!  ஆமா…அதெப்பிடிக் கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! நிலம் வீடுன்னு வாங்குவீங்க. எதையும் பல முறை யோசிச்சு செய்யுங்க. கையெழுத்துப் போடுவதற்கு முன் பேனாவை சரிபார்ப்பதைவிட உங்க தீர்மானத்தை சரிபாருங்க. திடீர்னு முகவரி மாறலாம். வீடாகவும் இருக்கலாம், ஆபீசாகவும் இருக்கலாம். சிவனை சிறுபோதும் மறக்காதீங்க.  பாப்பா பிறக்கப் போகிறது. அலுவலக சூழல் சற்று அவசர கதியில்தான் இருக்கும்.  விருந்துக்குப்போவீங்க…நல்லாச் சாப்பிடுங்க!

சந்திராஷ்டமம் : 29.04.2017 முதல் 02.05.2017 வரை

தனுசு

ஊருக்கெல்லாம் நல்லவங்களா இருக்கீங்களே… வீட்டுக்குள்ளும் நல்ல பெயர் எடுங்களேன்! உங்க அதிருஷ்டம் எல்லோரும் உங்களை அனுசரிச்சுக்கிட்டுத் தானே போறாங்க. அதுநிலைக்க வேணாமா? சாப்பாட்டு விஷயத்தில் அதி ஜாக்கிரதையா இருங்க. உடை மற்றும் உபயோகப் பொருட்களில் வெண்மையை உபயோகியுங்க. அலுவலகத்தில் திடீர்னு உங்களைக்கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பாங்க. சும்மாவா! கொஞ்ச நஞ்சமாகவா உழைச்சீங்க! விருது பரிசெல்லாம் உங்களுக்கு ஜுஜூபி. பரம்பரை வீடு நகை எல்லாம் தேடி வரும். நாராயணனை நாளும் சேவியுங்க. அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். வேலைக்குத் தகுந்த மரியாதையும் காசோலையும் இல்லையோ என்ற பதற்றத்தைத் தூக்கி உடைப்பில் போடுங்கள். எல்லாம் வரும்போது வரும். நமக்குத்தான் அவசரம்.

மகரம்

அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். எல்லா விஷயங்களையும் அணுகும் முறையில் சிறந்த பக்குவம்  வந்தாச்சு உங்களுக்கு. குழந்தைங்கன்னு இருந்தால் கோபம்னு இருக்கத்தான் செய்யும். சரிக்கு சமமாய் நின்று மல்லுக்கட்டாதீங்க. உங்க வயசென்ன அவங்க வயசென்ன! தேர்வுக்குப் படிக்கறவங்கள் ஒரு பத்து பர்சன்ட் முயற்சியை அதிகமாய்த் தாளிக்க வேண்டும். அப்போதுதான் ருசியான ரிசல்ட் வரும். சரியா? ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயங்கள் தீரும். அலுவலகம் பற்றி மனதில் அலையடித்துக் கொண்டிருந்த டென்ஷன்கள் டாட்டா பை பை சொல்லிட்டுக் கிளம்பிடும். விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான். குருவாயூரப்பனைப் பார்த்துக் குவியட்டும் கரம். எதற்கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்ல முறையில் முடிந்திருக்குமே. நிம்மதியா?. எந்தச் சூழலிலும்…யார் உங்களுக்கு டென்ஷனாக்க முயற்சித்தாலும் கம்மென்றிருங்கள். பொறுமைக்குப் பரிசு அடுத்த பஸ்ஸில் வந்துக்கிட்டே இருக்கு.

 

கும்பம்

கணவருக்கு/ மனைவிக்குப் பல வித நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தின ருடன் இணைந்து சந்தோஷப்படப் போறீங்க அல்லது குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாவாங்க. முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாது. அதற்காக ஒரேயடியாய்ப் பின்னால் சாய்ஞ்சுக்க வேண்டாம். பொறுப்பும் அக்கறையும் கவனமும் தேவை. கல்லூரியில்/ பள்ளியில் படிக்கறீங்களா? மம்மியை டீ போட்டுக் கொடுக்கச் சொல்லி கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாகப் படியுங்க. பலன் மிக அதிகம் கிடைக்கும். பொறுப்பு சுமத்தினாலும் புன்னகையுடன் சமாளிக்கும் குணம் உள்ளவர் நீங்க. கணவர்/ மனைவி முன்பைவிட அதிகமாக அட்ஜஸ்ட் செய்து கொள்வார். அதிருஷ்டம்தான் போங்க. . டாடியை நல்லாக் கவனிச்சுக்குங்க. புது வேலை தைரியமாத் தேடலாம். ஆனா இன்னிக்கு மனுப்போட்டா இன்னிக்கே சேருவீங்கன்னு கற்பனை செய்துக்க வேணாம். எல்லாத்துக்கும் நேரம் காலம் வரும்.

சந்திராஷ்டமம் : 06.05.2017 முதல் 08.05. 2017 வரை

மீனம்

உங்களுக்கு வரும் கோபம் எல்லாம் நியாயம் என்ற பட்டியலில் எழுதக்கூடியதுதான். அதுக்காக சர வெடி வெடிக்கணும்னு சட்டமா என்ன? இத்தனை நாளாய் ஊர்ந்து கொண்டிருந்த லாப விவகாரங்கள் கருடன் கணக்காய் ரெக்கை கட்டிக்கிட்டுப் பறந்து வந்து பணப் பெட்டிக்கு வந்து சேரும்.. குழந்தைகள் பேக்கெட் பேக்கெட்டாக சந்தோஷத்தை அளிப்பார்கள். நண்பர்களா பகைவர்களா என்று கொஞ்சம் உரசிப்பார்த்துப் பழகுங்கள். குறிப்பாக எதிர்பாலினத்தினரை. கிரவுண்ட் / ஃப்ளாட்டுக்குப் பத்திரம் பதியப் போறீங்க.  கனவுகளெல்லாம் பலிக்கும். உங்களுடைய நியாயத்தை மற்றவர்கள் புரிஞ்சுக்கலைன்னு புலம்பறீங்களே…புரிய வெச்சீங்களா? இயந்திரங்களை இயக்கும் போது மனசை உலாப்போக விடாதீங்க.

சந்திராஷ்டமம் : 08.05. 2017 முதல் 11.05.2017 வரை